பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தமிழ் நூல் அறிமுகம்

புகழ்மிகு சாந்துள்எறிந்து புல்எரி ஊட்டிப்

புகைகொடுக்கப் பெற்ற புலவோர்-துகள்பொழியும் வான்உயர் வெற்ப. (1)

(சாந்து - சநதனம். எறிந்து-வெட்டி. புலவோர். தேவர் துகள் மழைத்துளி.) -

காட்டுப்பன்றி அங்கங்கே தன் கொம்பினால் பூமி யைக் கிண்டுகிறது. அப்போது பூமிக்கடியில் புதைந் திருக்கும் மாணிக்கங்கள் வெளிவருகின்றன. அவற்றை நெருட்பு என்று எண்ணி வேடர்கள் தங்கள் கையைக் காய்ச்சிக்கொள்கிறார்களாம். -

"ஏனம் இடங் திட்ட ஈர்மணிகொண்டு எல்லிடைக்

கானவர் மக்கள் கனல்எனக் கைகாய்த்தும் வானஉயர் வெற்பன்.” (4)

(ஏனம்-காட்டுப் பன்றி. இடந்திட்ட - பெயர்த்துப் போட்ட ஈர்மணி - நீரோட்ட முடைய மாணிக்கம். எல்இரவு, கானவர் - வேடர்.1 -

ஆண் குரங்கு பலா மரத்தில் ஏறிக் கனிந்த பழத் தைப் பறிக்கிறது. உடனே தன் மனைவியாகிய மந்தியை அழைக்கிறதாம். -

பலவின் பழம்பெற்ற பைங்கண் கடுவன் . . . . . . . . எலஎன்று இணையயிரும் ஏகல்சூழ் வெற்பன். (10)

(கடுவன் - ஆண் குரங்கு எல என்பது எலே என்பது போன்ற விளிச் சொல். இணை-துணை; என்றது. பெண் குரங்கை பயிரும் அழைக்கும். ஏகல் - உயர்ந்த கல்.)

பாலை நிலத்தில் உள்ள மூங்கில்கள் கதிரவனுடைய வெம்மையான கதிர்களால் வெடித்து முத்துக்களைச்' சிதறுகின்றன (18); காடுகளில் காயாம்பூ அஞ்சனத்தைப்