பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திணைமொழி ஐம்பது 217

போலவும், மாதவி பெண்களின் பற்களைப் போலவும்; காந்தள் துடுப்பைப் போலவும் மலர்கின்றன (21): மருத மரத்தின் மலரில் உள்ள தாது கீழே மலர்ந்துள்ள நீலோற்பல மலரின் மேல் சொரிகிறது (32); வளைந்த அடிமரத்தையுடைய புன்னை மரம் கடற்கரையில் முத்துக் களைப் போன்ற அரும்புகளைத் தோற்றுவிக்கின்றன (42),

காதலர்களிடையே பிரிவினால் உண்டாகும் துன்ப மும், இணைவதனால் உண்டாகும் இன்பமும், தோழி அவர்களை இணைக்க முயலும் அன்பும் பல பாடல்களில் விரவி வருகின்றன.

ஐம்பது பாடல்களில் ஐம்பது காதற் சித்திரங்களைக் காட்டும் நூல் இது.