பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களில் பல பிறமொழிகளில்: பெயர்க்கப்பட்டுள்ளன. திருக்குறளைப் போல மிகுதியாக மொழி பெயர்க்கப் பெற்ற நூல் தமிழில் வேறு இல்லை. இந்திய நாட்டு நூல்களில் பகவத் கீதையும் திருக்குறளும் அநேகமாக எல்லா மொழிகளிலும் பெயர்க்கப்பட். டுள்ளன.

பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் தமக்கு முன் தோன்றிய எல்லா நூல்களையும் படித்தவர் என்று. தோன்றுகிறது. இவருக்குப் பின் வந்த தமிழ்ப் புலவர் களில் இவருடைய நூலைப் படிக்காதவர் யாரும் இருக்க, (քւգաո Յ5l. x - X- .

அறத்துப்பால், பொருட்டால், காமத்துப்பால் என்ற மூன்று பகுதிகளை உடையது. திருக்குறள். திருக்குறள் என்பது பிற்காலத்தில் வழங்கும் பெயர். அதன் பெயர் முப்பால் என்று தெரிய வருகிறது. திருவள்ளுவரின் காலம் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம்.

அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 10 அதிகாரங்களும், காமத்துப்பாலில் 25 அதிகாரங்: களுமாக 183 அதிகாரங்கள் அடங்கிய இந்த நூலில் அதிகாரத்துக்குப் பத்துக் குறளாக 1830 குறள்கள்