பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. திருக்குறள் 219

உள்ளன. இந்த நூலைச் சிறப்பித்துப் பாடிய 53 பாடல் கள் உள்ள திருவள்ளுவ மாலை என்ற தனி நூலே இருக்கிறது. அதில் உள்ளவற்றை யன்றி வேறு புலவர்கள் பாடிய பாடல்களும், பிற நூல்களினிடையே வரும் சிறப்புக்களும் திருக்குறளின் மாண்பையும் யாவரும் படித்தறிந்து போற்றிய பெருமையையம் புலப்படுத்தும்.

மிகச் சுருங்கிய அளவில் அமைந்து, மனித வாழ்க் கைக்கு இன்றியமையாத பல கருத்துக்களையும் கொண்டு, காலம் இடம் இனம் என்ற வேறு பாட்டுக்கு அப்பாற். பட்ட அடிப்படையான உண்மைகளைச் சொல்லுவதா னால் இந்த நூல் இன்னும் பயனுடையதாக இருக்கிறது. இந்த நூலின் பெருமையை நாளடைவில் அறிந்து பாராட்டும் மக்கள் உலகத்தில் அதிகம்ாகிக்கொண்டு வருகிறார்கள். • .

வெறும் நீதி நூலாக மட்டும் இருந்தால் இத்தனைச் சிறப்பு வந்திருக்க நியாயம் இல்லை. இனிய கவிச்சுவை அமைந்திருப்பதால் இதற்குச் சிறந்த இலக்கிய மதிப்பும் சேர்ந்திருக்கிறது. ரஷ்யாவிலிருந்து இப்ரஹிமோவ் என்ற அறிஞர் சென்னைக்கு வந்தார். தமிழ் நாவல், சிறு கதை முதலியவற்றை மொழி பெயர்க்கும் முயற்சி யில் ஈடுபட்டவர் அவர். தமிழை அறிந்தவர். அவர் என்னைப் பார்க்க வந்தார். பேசிக்கொண்டிருந்தோம். 'நீங்கள் பழைய தமிழ் நூல்களைப் படிப்பதுண்டா?” என்று கேட்டேன். 'திருக்குறளைப் படித்திருக்கிறேன்.” என்றார். அதில் என்ன சிறப்பைக் கண்டீர்கள்?' என்று கேட்டேன். மனித வாழ்கையின் பல துறைகளையும் பற்றிச் சுருக்கமாகக் கருத்துக்களைச் சொல்கிறது" என்று. சொல்வார் என்று.எதிர் பார்த்தேன். அவர், 'அதன் கவிச் சுவை என் உள்ளத்தை ஈர்த்தது” என்றார். அதைக் கேட்டு நான் வியப்படைந்தேன். நீதி நூல் என்பது பயன் உடையதாக இருந்தாலும் பெரும்பாலும் நயன்