பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ෆු90 தமிழ் நூல் அறிமுகம்

உடையதாக இருக்கும் மொழியின் இலக்கணத்தைச் சொல்லும் இலக்கண நூல் மிகவும் பயனுள்ளது; ஆனால் அதை யாரும் விரும்பிப் படிக்க மாட்டார்கள். ஆகவே நயனுடைய தென்று சொல்ல முடியாது. வாழ்க்கையின் இலக்கணத்தைச் சொல்லும் நீதி நூலும் அத்தகையதே. அதிலும் சுவைதரும் நயத்தைக் காணமுடியாது. இதற்கு விலக்காகத் திருக்குறள் மனித சாதிக்கு இன்றியமையாத வாழ்விலக்கணத்தைச் சொல்லுவதால் பயனுள்ள நூலாக, நீதி நூலாக விளங்குகிறது. அதே சமயத்தில் நீதிகளைச் சொல்லும் போது சுவைபடச் சொல்வதால் கவிதையாக, நயமுடையதாக விளங்குகிறது. இதை அறிந்தே அறிஞர் இப்ரஹிமோவ் அப்படிச்சொன்னார் என்று கருதுகிறேன்.

இப்ரஹிமோவ் என்ன? திருக்குறளை ஓதி உணர்ந்த வெளி நாட்டார் பலர் இந்தக் கருத்தைச் சொல்லியிருக் கிறார்கள். சார்லஸ் இ. கவர் என்பவர் (Charles E. Gover) :குறள் ஓர் இலக்கியக் கருவூலம், கவிதைக் குரல் என்பதில் ஜயமே இல்லை; கிரேக்கர்களுக்கு ஹோமரது காவியம் எத்தகையதோ அவ்வாறு சொற் சிறப்பும் நீதிச் சிறப்பும் மிகச் சிறந்த முறையில் அமைந்தது.” என்கிறார். எம். ஏரியல் என்பவர், "குறள் தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பு; மனித சிந்தனையின் தூய வெளியீடு' என்கிறார், டாக்டர் கிரெளல். "அதனுடைய உளம் கவர் பண்பை எந்த மொழி பெயர்ப்பும் கொள்ள இயலாது. அது வெள்ளித் தட்டில் வைத்த தங்கக் கனி' என்று பாராட்டுகிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி யூ. போப், "இலக்கிய வளாகத்தில் நீதிச் செய்யுளைச் சேர்த்துக் கொள்வதற்குக் கலைஞர்கள் ஒப்பு வதில்லை. ஆனால் வேலைப்பாட்டின் சிறப்பும் கவிதைக் கனலின் ஒளியினால் அங்கங்கே நீதியும் தேசத்தை