பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. திருக்குறள் - 221

செய்யும் தகைமையும் இருக்குமாயின் எந்த நீதிச் செய்யு

ளையும் உண்மையான கவிதையாக ஏற்றுக் கொள்வது முறையாகும் என்றால், திருக்குறள் அத்தகைய கவிதை

யாகும்' என்று தெளிவாகச் சொல்கிறார். வ. வே. சு. ஐயர் கூறும் விமரிசனம் திருக்குறளின் பெருமையை விளக்க

மாக எடுத்துக் காட்டுகிறது. 'மனிதனால் என்றும் வெளி

யிடப்படாத மிக ஆழமான கருத்துக்களைச் சுருக்கி இந்த

ஆசிரியர் ஏழே சீர்களில் அமைத்திருக்கிறார். இந்தச் சிறிய இன்னிசைக் கருவியை அவர் சிறந்த இசைவல்லு

நனைப்போல எவ்வளவு அழகாக வாசித் திருக்கிறார் ! ஒளி

விடும் சாதுரியம், நகைச்சுவை, அழுத்தமாகச் சொல்லு

தல், கற்பனை, முரண்பாட்டு நயம், வினாவுதல், ஓவியம் போன்ற உவமைகளை இப்படிக் கருவிலே திருவுடைய

கலைஞன் ஆளும் ஆயிரம் உத்திகளில் ஒன்றையும் அவர்

இந்த முழுமையான கலைப்படைப்பில் ஆளாமல் விட்டு

விடவில்லை' என்று அவர் விமரிசனம் செய்கிறார்.

திருக்குறளின் கவிப்பண்பைத் தமிழ்ப் புலவர்களும் உணர்ந்து பாராட்டியிருக்கிறார்கள் நின்று அல்ர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்' என்று திருவள்ளுவ மாலையில் உள்ள ஒரு பாட்டுச் சொல்கிறது. தேன் பிலிற்றும் நீர்மை யென்பது கவிச்சுவையைச் சுட்டிச் சொன்னது. 'பாவிற் சிறந்த முப்பால்', 'சிந்தைக்கினிய செவிக்கினிய வாங்க்கினிய', "வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும், தெள்ளமுதின் தீஞ்சு வையும் ஒவ்வாதால்' என்று திருவள்ளுவ மாலையில் வரும் பகுதிகளும் இந்தக் கருத்தைத் தெளிவாக்கு கின்றன. - ‘.

முதற் குறளே கவிதைச் சிறப்போடு விளங்குகிறது. எல்லாவற்றிற்கும் கடவுள் முதல் அல்லது எல்லாம் கடவுளிடத்திலிருந்து தோன்றுகின்றன என்பது ஒரு