பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தமிழ் 576) அறிமுகம்

கருத்து. அதை அப்படியே சொன்னால் ஒரு கருத்தைக் தெளிவாகச் சொல்வதாக இருக்கும். கவிஞன் தன் கருத்தை விளக்க ஆளும் உத்திகளில் உவமை ஒன்று திருவள்ளுவர் முதற் குறளில் உவமையை ஆளுகிறார். "எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் அகரம் முதலாக அமைந் திருப்பது போல, உலகம் அனைத்திற்கும் கடவுளே முதலாக இருக்கிறான்' என்ற கருத்தை அந்தக் குறள் சொல்கிறது. தமிழ் எழுத்துக்களுக்கு அகரம் முதலாவது போல என்று உவமை கூறாமல், எல்லா எழுத்துக்களுக்கும் அகரம் முதலாக நிற்றல் போல என்று கூறுவது வள்ளுவ ருடைய பரந்த அறிவையும் விரிந்த மனப்பான்மை யையும் புலப்படுத்துகிறது. கடவுளை எல்லாவற்றுக்கும். முதல்வன் என்று சொல்ல வருகிறவர், அந்த இலக்கணம் அவன் பெயரைக் கூறினாலே விளங்கும் என்பாரைப் போல, அந்த முதன்மையைக் காட்டும் ஆதிபகவன் என்ற பெயரால் கடவுளைக் கூறுகிறார்.

'அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

பகவன் முதற்றே உலகு."

அகரத்தை இறைவனுக்கு உவமையாகச் சொன்னதை வெவ்வேறு வகையில் உரையாசிரியர்கள் விளக்கிக் காட்டு கிறார்கள். அகரம் இயற்கையாக, எதனுடைய விகார மாகவும் இல்லாமல் இருக்கிறது; வாயைத் திறந்தாலே அகரம் ஒலிக்கிறது; அவ்வாறே இறைவன் சுதந்தரனாய், எந்தப் பொருளினுடைய விகாரமாகவும் இல்லாமல் விளங்குகிறான். அகரம் எல்லா எழுத்துக்களின் ஒசை யிலும் மறைந்தும், தெரிந்தும் கலந்திருக்கிறது; தனி யாகவும் இருக்கிறது. அ என்னும் போது அது தனியாக நிற்கிறது; இறைவன் எதனோடும் இணையாமல் தனியா கவும் இருக்கிறான். ப என்று சொல்லும் போது அதில் அகரம் இருக்கிறது; பகரத்தோடு இணைந்திருக்கிறது.