பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. திருக்குறள் 2፮8

என்றாலும் தன் ஒசையைக் கட்டிக்கொண்டு நிற்கிறது. அப்படியே இறைவனும் பொருள்களோடு இணைந்தும் இணையாமலும் இருக்கிறான். தனி அகரம், உயிர் மெய், அகரம் (க, ங், ச போன்றவை) அல்லாத மற்ற எல்லா எழுத்துக்களிலும் அகரத்தின் ஒலி இருந்தாலும் மறைந்து நிற்கிறது. இறைவனும் பொருள்களில் இணைந்து கரந்து, நிற்கிறான்.

அ என்ற ஒலி ஒன்றாக இருந்தாலும் அதற்குரிய வரிவடிவங்கள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வகையாக இருக்கின்றன. அவ்வாறே இறைவன் ஒருவனே ஆயினும் வெவ்வேறு பெயர்களும் உருவங்களும் கொள். கிறான். ஒவிக்கு எழுத்து அடையாளமாக நிற்பதைப் போல, இறைவனுக்குப் பலபலவாக உள்ள குறிகளும் உருவங்களும் அடையாளங்களாக இருக்கின்றன.

அகர உயிர்போல அறிவாகி எங்கும்

கிகரில் இறை கிற்கும் கிறைந்து'

என்று சைவ சாத்திரம் கூறுகிறது.

இப்படி இந்த உவமையை மேலும் மேலும் விரித்துக்

கொண்டே போகலாம். - - -

வறுமையின் கொடுமையைச் சொல்ல - வருகிறார் திருவள்ளுவர். இன்மையைப் போலக் கொடியது. ஏதேனும் உண்டா என்று கேட்பவரைப் போல முதலில் ஒரு வினாவை எழுப்புகிறார். - - - - - - - - -

'இன்மையின் இன்னாதது யாது?" - என்பது அலர் கேள்வி. அதைக் கேட்டவுடன் நாம் பலவகை உவமைகளைச் சித்திக்கத் தொடங்குகிறோம்.

எதை எதையோ நினைக்கிறோம். நம்முடைய அனுபவத். தில் எது எது துன்பமாகத் தோன்றுகிறதோ அதையெல்