பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தமிழ் நூல் அறிமுகம்

ல்ாம் சொல்ல எண்ணுகிறோம். திட்டமாக இது தான் இதற்கு உவமை என்று சொல்ல முடியாமல் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, வள்ளுவர் தாமே அந்த வினாவுக்கு விடை அளிப்பவரைப் போலத் தொடங்குகிறார்.

'இன்மையின் இன்னாதது யாது?- எனின்.'

ஆம். திருவள்ளுவரே உவமை கூறப் போகிறார் என்று தோன்றுகிறது, அவர் உவமை கூறினால் அது சிறப்பாகத் தானே இருக்கும்? ஆகவே நாம் உவமையைத் தேடிச் சிந்திப்பதை விட்டு, அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலோடு இருக்கிறோம். எனின் என்ற சொல்

அந்த ஆவலை எழுப்பி விடுகிறது. • *

'இன்மையின் இன்னாதது யாது-எளின்,

இன்மையின்...' -

இதோ வள்ளுவர் சொல்லைத் தொடங்கி விட்டார். கேள்வி கேட்டவரே விடை கூறப் போகிறார். இன்மை யைப் போல' என்று ஆரம்பித்து விட்டார். அவர் எதை உவமை கூறப்போகிறாரோ என்று நம்மிடம் ஆர்வம் பெருகுகிறது. விரைவில் சோல்ல மாட்டாரா என்ற வேகம் பிறக்கிறது. அவர் கூறி முடித்து விடுகிறார்’ எப்படி?

- "இன்மையின் இன்னாதது யாது.எனின் இன்மையின்.

இன்மையே இன்னாதது.' x

அவர் உவமையா கூறினார்? இன்மைக்கு உவமை காணப் புகுந்து, அதன் கொடுமைக்கு எதை எதையோ உவமையாக எண்ணி எண்ணி, அவற்றுள் ஒன்றும் அதன் கொடுமைக்கு அருகில் வரமுடியாதென்பதை உணர்ந்து, இறுதியில் அதற்கு அதுவே ஒப்பு என்று சொல்லி முடித்து விடுகிறார்.இன்மை எல்லாவற்றிலும்கொடியது”