பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. திரிகடுகம்

சரியாக எழுத்துக்களைச் சேர்த்துப் படிக்காமல், தாறுமாறாக எழுத்துக்களைக் கூட்டி ஒருவன் ப்டித்தால், சஎன்னடா இது? சுக்குமொ-ளகுதிப்-பிலி என்று படிக்கிறாயே' என்று சொல்வது வழக்கம், சுக்கு, மிளகு, திப்பிலி என்று பிரித்துப் படிப்பது முறை. இந்த உதாரணம் திரிகடுகம் என்ற மூன்று சரக்குகளைச் சுட்டு இறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்றுக்கும் திரிகடுகம் என்று பெயர் இந்த மூன்றினால் அமைந்த மருந்துக்கும் திரிகடுகம் என்று பெயர்.

பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய திரிகடுகம் என்பது ஒவ்வொரு பாட்டிலும் மூன்று மூன்று கருத்துக் களைச் சொல்வதால் அந்தப் பெயரை உடையதாயிற்று. இதனை இயற்றியவர் நல்லாதனார் என்பவர். அவர் திருத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர். கடவுள் வாழ்த்தாக உள்ள் பாடல் திருமாலின் புகழைச் சொல்வதால் அவர் திருமாலை வழிபடுகிறவர் என்று தெரிகிறது. . . ஒவ்வொரு பாடலிலும் மூன்று கருத்துக்களைச் சொல்வி, இம்மூன்றும் இத்தகையவை' என்று அவற்றி னுடே உள்ள பொதுமையை இறுதியடியில் சொல்லி யிருக்கிறார் ஆசிரியர். .

திரிகடுகமாகிய மூன்று மருந்துப் பண்டங்களைப் போல மூன்று கருத்துக்களைக் கூறி நன்மை செய்வது