பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழ் நூல் அறிமுகம்

இந்த நூல் என்பதை இதற்கு அமைந்த சிறப்புப்பாயிரம். ஒன்று தெளிய வைக்கிறது.

"உலகில் கடுகம் உடலின்நோய் மாற்றம்:

அலகில் அகநோய் அகற்றும் நிலைகொள் திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம் மருவும்கல் லாதன் மருந்து'

என்பது அந்தப் பாடல். இந்த நூலின் முதற்பாட்டிலும் இந்தக் கருத்தை ஆசிரியர் குறிப்பிக்கிறார். அருந்ததி போன்ற கற்புடைய மங்கையரின் தோளும், பழங்குடிப் பிறந்து சிறப்புற்றார்களுடைய உறவும், நம்முடைய சொற்களில் உள்ள குறைகளைப் போக்கும் கேள்விச் செல்வர்களுடைய நட்பும் திரிகடுகம் போன்ற மருந்து" என்று அந்தப் பாட்டில் சொல்கிறார்.

'அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய

தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின் அளில் அகற்றும் கேள்வியார் நட்பும்இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து ' கடவுள் வாழ்த்திலும் மூன்று செய்திகளைச் சொல் கிறார். காயாம்பூ மேனியனாகிய கண்ணனுடைய திருவடிப் பெருமையைச் சொல்ல வருகிறார். அது ஞாலத்தை அளந்தது, குருந்த மரத்தைச் சாய்த்தது: சகடாசுரனை உதைத்தது, இந்த மூன்று செயல்களையும் எடுத்துக் காட்டி, கடவுள் வாழ்த்தையும் மற்றப்பாடல் களின் போக்கிலே மூன்றைச் சொல்லும் செய்யுளாகவே அமைத்து விடுகிறார் ஆசிரியர். - -

"கண் அகன் ஞாலம் அளந்தது.உம், காமருசீர்த்

தண்ாறும் பூங்குறுக்தம் சாய்த்தது உம்-கண்ணிய மாயச் சகடம் உதைத்தது உம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.'