பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. திரிகடுகம் 229

'இம்மூன்றும், அறியாமையால் வரும் கேடு என்று. மூன்று கருத்துக்களை இணைத்துச்சொல்கிறார். அறிவின் மையால் செய்கிற தீய செயல்கள் மூன்றை அங்கே சொல்கிறார். படிக்காத பேதையர்களுக்கு நண்பனாக இருத்தல், கோபம் கொண்ட மனைவியைக் கோலால் அடித்தல், சிறுமையான குணம் உடையவர்களை வீட்டுக்குள் அழைத்துச் செல்லுதல் ஆகிய இம்மூன்றும் முட்டாள் தனமான காரியங்களாம்.

'கல்லார்க்கு இனனா ஒழுகலும் காழ்க்கொண்ட

இல்லாளைக் கோலால் புடைத்தலும் இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும் இம் மூன்றும் அறியாமையால்வரும் கேடு." . -

முட்டாள் என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல் முற்றாள் என்பதன் திரிபு. அவன் தன் உடம்பு முழுதும் ஆளாக இருப்பவனே அன்றி, அறிவுக்கு இட மில்லை என்பது கருத்து. அதையே முழுமகன் என்றும் சொல்வார்கள். முட்டாள்கள் முழுமக்கள் என்று திரிகடுகம் ஆசிரியர் குறிக்கிறார். அவர்களைப் பற்றி இரண்டு பாடல்களை அவர் சொல்கிறார். - -:

பெருமையை உடையவர்கள் தொடர்பினின்றும் நீங்குவது, தமக்கு உரிமையில்லாத அயற்பெண்டிரை விரும்புதல், மேலானவை அல்லாதவற்றைக் செய்யத் துணிதல். ஆகிய மூன்றும் முட்டாள்கள் விரும்பிச் செய்யும் காரியங்களாம். இப்படி 9-ஆவது பங்டவில் சொல்லியிருக்கிறார்.

யார் யார் முட்டாளாக்ச் சொல்வதற்குரியவர்கள்? 81-ஆம் பாட்டில் அதைச் சொல்கிறார். கொலைத் தொழிலுக்கு அஞ்சாதவன் கல்வியில்லாதவர்களுடைய கூட்டத்தில் சேர்ந்து கொள்பவன். ஒரு முயற்சியும் - 5-15 - : . . . . . . -