பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. திரிகடும் 231

வரும் வருவாயில் கால் பங்கு பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும். தர்மத்துக்கு விட்ட சொத்துக்களைப் பற்றிக் கொண்டவனது வீட்டில் கற்றறிந்த பெரியோர்கள் உண்ணமாட்டார்கள். சூதாட்டத்தில் வரும் பொருளுக் காக ஆசைப்படாமல் இருப்பதும் உழவிலே ஆசை வைத்து முயற்சி செய்வதும் வேளாண் குடிக்கு அழகு. விருந்தாளியில்லாமல் சாப்பிடுவது கூடாது; அப்படி உண்ணும் நாள், நோய் வந்த நாளைப் போன்றது. கல்வி மறுமைக்கும் உதவியாக இருக்க வேண்டும். தாய்ப்பால் உண்ணாத குழுவி வறுமையை உடையது. ஈவதன் பொருட்டே பொருளை ஈட்ட வேண்டும். படித்தவர் அறநெறியில் ஒழுகும்படி செய்வதற்காகவே பெருநூலை இயற்ற வேண்டும்-இப்படிப் பல செய்திகளும் நீதிகளும் இடையிடையே வருகின்றன. .

கற்புடைய பெண்மணி கடமையாகக் கொள்ள வேண்டிய இவை என்று ஒரு பாட்டில் சொல்கிறார். நல்விருந்து ஒம்ப வேண்டும்; அதனால் அவள் தோழியைப் போல இருப்பாள். வீட்டில் உள்ளவர்களை நாள்தோறும் அன்போடு காப்பாற்றுவதால் தாயைப் போன்றவள். பழங்கால முதல் புகழ் பெற்று வரும் குடி வளரும் பொருட்டுக் குழந்தைகளைப் பெறுவதால் அவள் மனைக் .கிழத்தி ஆகிறாள். இவ்வாறு மூன்று நிலைகளைச் சொல்

.கிறார். :

கல்விருந்து ஒம்பலின் கட்டாளாம்; வைகலும்

இற்புறம் செய்தலின் ஈன்றதாய், தொல்குடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி, இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன்' கற்புடைய மங்கையர் பெருமையை எடுத்துச்

சொல்ல வந்த திருவள்ளுவர், வேறு தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனையே கடவுளாக எண்ணித்