பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தமிழ் நூல் அறிமுகம்

தொழுது எழும் பெண்மணி, மழையே, நீ பெய்'என்றால் பெய்யும்' என்று சொல்கிறார். 'தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை” என்பது குறள். வேறு நூல்களிலும் மழை வேண்டு. மானால் பெய்யச் செய்யும் ஆற்றலுடையவர்கள் கற்புடைப் பெண்டிர் என்ற கருத்து வருகிறது.

பெய்யென்றால் மழையைப் பெய்யச் செய்யும் ஆற்று. லுடையவர் கற்புடை மங்கையர் மட்டும் அல்லர்; வேறு இருவகையினரும் அத்தகைய அற்புதத்தை நிகழ்த்தக் கூடியவர்களாம். கற்புடை மகளிரையும் சேர்த்து. மூவரைச் சொல்கிறார் திரிகடுகத்தின் ஆசிரியர். தன்னைக் கொண்ட கணவனுடைய உள்ளக் குறுப்பை அறிந்து ஒழுகும் கற்புடை மங்கை பெய் என்றால் மழை பெய்யும். தான் மேற்கொண்ட தவத்தை எவ்வாறு கடைப் பிடித்துச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்கிறவன் தவசி; அவன் பெய் என்றால் மழை பெய்யும். கொடிய செயல்களைச் செய்யாமல் விட்டு விட்டு நல்ல காரியங். களையே செய்பவன்தான் நியாயமான அரசன்; அவன் மழையைப் பெய்யச் செய்யும் பெருண்மயை உடைவன்.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி; கொண்ட ை செய்வகை செய்வான் தவசி; கொடிதுஒரீஇ கல்லவை செய்வான அரசன், இவர்மூவர் பெய்எனப் பெய்யும் மழை. கல்வியின் பெருமையையும், கல்லாமையின் இழி தகவையும் பல பாடல்களில் சொல்கிறார் நல்லாதனார். ஒரு பாட்டில், வாய்ப் பகையுள், சொல்வென்றி. வேண்டும் இலிங்கியும் கல்வி புணை கைவிட்டவன் என்று சொல்கிறார். வாக்கு வாதம் செய்யும், சொற் போரில் வாக்கு வன்மையில் வெற்றியை