பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 திரிகடுகம் 23

விரும்பும் இலிங்கி கல்வியென்னும் புணையைக் கை விட்டான்' என்பது பொருள். இங்கே இலிங்கி என்பது சைவ சமயத்தினனைக் குறிக்கும். இவர் வைணவ ராதவின் வெறும் வாய்ச் சொல்லை உடையவன் இலிங்கத்தை வழி படும் சைவன்' என்று இழிவாகக் கூறினார் போலும்! -

நுட்பமும் திட்பமும் ஆகிய பல கருத்துக்களை அடைவு படுத்திக் கூறும் இந்த நூலில் உள்ள பாடல்களின் அடிகள் தனித்தனியே புலவர் பேச்சில் அடிக்கடி வரும். அதனால் இந்த நூல் தமிழ்நாட்டில் நன்றாகப் பரவி

பெருமையை உடையது என்பது தெளிவாகும். -