பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. ஆசாரக் கோவை

இன்னபடி நடக்க வேண்டும், இன்னபடி நடக்கக் கூடாது என்று விதிகளையும் விலக்குகளையும் சொல்லும் நூல்களுக்குத் தர்ம சாஸ்திரம் என்று வடமொழியில் பெயர் சொல்வார்கள். வட மொழியில் பல தர்ம சூத்தி ரங்கள் உண்டு. மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளும் உண்டு. அவற்றை ஒருவாறு ஆராய்ந்து இன்னபடி நாம் ஒழுக வேண்டும் என்று நூறு வெண்பாக்களால் சொல் லும் இந்த நூல் கயத்துார்ப் பெருவாயில் முள்ளியார் என்னும் புலவர் இயற்றியது. இவர் முனிவர்கள் இயற்றிய நூல்களை ஆராய்ந்து, யாரும் அறியும் வகையில் முக்கிய மானவற்றைத் தொகுத்து இந்நூலை இயற்றினார் என்று, இதற்குள்ள சிறப்புப் பாயிரத்தால் தெரிய வருகிறது.

'ஆர்எயில் மூன்றும் அழித்தான் அடிஏத்தி

ஆரிடத்துத் தான்.அறிந்த மாத்திரையான் ஆசாரம், ஆரும் அறிய அறன்.ஆய மற்றவற்றை . . ஆசாரக் கோவை எனத்தொகுத்தான், தீராத் திருவாயில் ஆய திறல்வண் கயத்துர்ப் பெருவாயில் முள்ளிஎன் பான்.'

இதனால் இவர் சிவபெருமானை வழிபடுகிறவர். என்பதும், கயத்துரை அடுத்த பெருவாயில் என்னும் ஊரினர் என்பதும் தெரியவருகின்றன. ஆரிடம் என்பது ரிஷிகளால் செய்த நூலைக் குறிக்கும்.