பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38, ஆசார்க் கோவை 385

ஆசாரம் என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள்; அச்சொல்லை இவ்வாசிரியர் முதற் பாட்டிலும் இறுதிப் பாட்டிலும் இடையில் இரண்டு பாடல்களிலும் ஆள்வர். இரண்டடியாலாகிய குறள் வெண்பா ஒன்றும்; மூன்றடி யாலாகிய சிந்தியல் வெண்பா ஐம்பத்து மூன்றும், நான்கடியாலாகிய இன்னிசை நேரிசை சவலை வெண்பாக் கள் முப்பத்தொன்பதும், ஐந்தடியாலாகிய பஃறொடை வெண்பா ஏழும் ஆக நூறு வெண்பாக்கள் இந்த நூலில் உளளன. - -

மக்கள் வாழ் நாளில் மேற்கொள்ள வேண்டிய குணங்களையும், காலை முதல் மாலை வரையில் செய்யத் தக்கவற்றையும், தகாதவற்றையும், பெரியோர் முன் எவ்வாறு ஒழுக வேண்டும் என்பதையும், இன்ன இன்ன இடங்களில் இன்ன இன்ன காரியங்களைச்செய்தல்கூடாது என்பதையும், இவை போன்ற பலவற்றையும் இந்நூல் சொல்கிறது. நீராடுவது, உண்பது, உறங்குவது போன்ற வற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்று நியமிக்கும் பாடல்கள் சில சொன்ன செய்திகளைத் தொகுத்து இத்தனை என்று எண்ணிக்கையால் சுட்டிச் சொல்லும் பாடல்கள் பல

எல்லா ஒழுக்கங்களுக்கும் அடிப்படையானவை எட்டு என்று முதற்பாட்டிலே சொல்கிறார். நன்றியறிவு, பொறுமை, இன்சொல், அஹிம்சை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்லவர் நட்பு இந்த எட்டும். ஆசாரத்துக்கு வித்துப் போன்றவை' என்கிறார். - 'நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை கல்லினத் தாரோடு கட்டல் இவைஎட்டும். சொல்லிய ஆசார வித்து