பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தமிழ் நூல் அறிமுகம்

எவ்வெப்பொழுது நீராட வேண்டும்? தெய்வத்தைத் தொழுவதற்கு முன்னும், தீக்கனாக் கண்டபோதும், தீட்டு உண்டான போதும், வாந்தி எடுத்த சமயத்திலும், மயிர் களைந்த காலத்திலும், உண்ணுவதற்கு முன்னும், துயிலெழுந்த பின்னரும், இன்பம் துய்த்த பின்னரும், துயரல்லாத மக்கள்மேல் பட்ட போதும், மயக்கம்

உண்டான போதும் நீராட வேண்டும். -

நீராடுவதைப் பற்றி வரும் ஆசாரக் கருத்துக்கள் வருமாறு: - -

ஆடையின்றி நீராடக் கூடாது; உடுத்த ஆடையை நீரில் பிழியக் கூடாது; நீர்க்குள் தம் நிழலைப் பார்க்கக் கூடாது; நீராடும்போது நீந்தக் கூடாது; நீரில் உமிழக் கூடாது; குதித்துக் கூத்தாடக் கூடாது; விளையாடக் கூடாது; தலைமுழுகாமல் நீராடக்கூடாது.

உண்பதைப் பற்றிய விதிகள் பல :

உண்ணும்போது ஒற்றை ஆடை மட்டும்உடுத்திருக்கக் கூடாது; நீராடி, காலை அலம்பி, வாயைக் கழுவி, நிலத் தைத் தூயதாக மண்டலம் செய்து உண்ண வேண்டும்; காலில் ஈரம் இருக்கும்போது உண்க; கிழக்குத் திசை நோக்கி உண்க; தூங்காமல் அசையாமல் நன்றாக அமர்ந்துகொண்டு, வேறு எதையும் பாராமல், பேசாமல், இறைவனை நினைந்து, உணவைச் சிந்தாமல் உண்ண வேண்டும்; விருந்தாளிகளுக்கும் மூத்தவர்களுக்கும் பசுவுக்கும் பறவைகளுக்கும் குழந்தைகளுக்கும் உணவு அளித்த பிறகே உண்ண வேண்டும்; படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் வெட்ட வெளியிலும் ஒழுக்க முடை யார் உண்ணமாட்டார்கள்; அதிகமாக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்; பெரியவர்கள் உண்பதற்கு முன் உண்ணார்.