பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. ஆசாரக் கோவை 237

கசப்பான பொருளைக் கடைசியிலும் தித்திப்பான வற்றை முதலிலும் மற்றவற்றை இடையிலும் உண்ண வேண்டும்; விருந்தாளி இல்லாமல் தாம் உண்ணுவதற்காக மட்டும் உலை ஏற்ற மாட்டார்கள்; வீட்டில் காகபலி, இறைவனுக்கு நிவேதனம் ஆகியவை செய்த பின் உண்க.

திருமணம், தெய்வத் திருவிழா, பிதிர் காரியம்

செய்யும் நாள், வேள்வி என்ற ஐந்து சமயங்களிலும் விருந்தினரை உண்பிக்க வேண்டும். உணவைப் பழித்

தல் கூடாது.

வேறு சில முக்கியமான விதிமுறைகள் வருமாறு:

தலையில் தேய்த்துக் கொண்ட எண்ணெயை உடம்பில் தடவிக் கொள்ளக் கூடாது. செருப்பை இரவல் வாங்குவது தவறு. பெளர்ணமியில் மரத்தை வெட்டுதல் கூடாது. இரண்டு கையால் தண்ணீர் பருகக் கூடாது. உடம்பில் இரு கையாலும் சொறியக் கூடாது. வடக்குத் திசையிலும் கோணத் திசையிலும் தலை வைத்துப் படுப்பது நன்றன்று. பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கியும் சிறுநீர் கழித்தல் பிழை. காலோடு காலைத் தேய்த்தல் கூடாது. படியைக் கவிழ்த்து உட்காரக் கூடாது. மணையைக் கவிழ்க்கக் கூடாது. பாழ்மனை .யிலும், கோவிலும், சுடுகாட்டிலும், ஊரில்லாத இடத்தில் முளைத்த தனிமரத்தடியிலும் தனியாகப் போகக்கூடாது. தாய், மகள், உடன் பிறந்தாள். ஆனாலும் அவர்களோடு தனியாக இருத்தல் தீங்கு பயக்கும். - . . . . . ;

பெரியவர்கள் வீட்டிலும் கோயிலிலும் தாய் தந்தையர் வந்தாலும் வணங்குவது முறையன்று. பெரிய வர்களுக்கு. முன் சிரித்தல், கொட்டாவி விடல், காறித் துப்புதல், தும்முதல் இவை செய்தல் கூடாது.