பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தமிழ்நூல் அறிமுகம்

பாம்பு, அரசன், நெருப்பு, சிங்கம் - இந்த நான்கும். இளமையுடையன, எளியனவாக இருக்கின்றன, பழக்கப் பட்டவை என்று எண்ணிக் கவனக்குறைவாக இருந்தால் ஆபத்து உண்டாகும். ஒருவர் தலையில் அணிந்த பூவை அணிவதும், மோந்து பார்த்த பூவைச் சூடுவதும் கூடா.

தன் உடம்பையும், மனைவியையும், அடைக்கலம் என்று புகுந்தோரையும், உயிர் வாழ்வதற்காகச் சேமித்து வைத்த பொருளையும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். - - -

தெய்வத்தைப்போல எண்ணித் தொழுது எழவேண் டியவர்கள் ஐவர். அவர்கள் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன் ஆகிய இவர்கள்.

'அரசன். உவாத்தியான், தாய்தந்தை, தம்முன்,

நிகர்இல் குரவர்இவர் ஐவர்; இவர் இவரைத் தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே யாவரும் கண்ட நெறி.”

எந்த எந்த இடங்களில் எச்சில் உமிழக் கூடாது? மலசலம் கழிக்கக் கூடாது? பசுமாடு மேயும் புல்வெளி, பயிர் விளையும் இடம், சாணம் உள்ள இடம், சுடுகாடு, நடக்கும் வழி, தீர்த்தம், கோயில், நிழல் உள்ள இடங்கள். பசுக்கொட்டில், சாம்பல் உள்ள இடம் என்று பத்து இடங்களைச் சொல்கிறார்.

பஞ்ச மகாபாதகங்கள் எவை? பிறர் மனைவிழைதல், கள், களவு, சூது, கொலை என்பன.

பொய், கோள் சொல்லுதல், திருடுதல், பொறாமை

இந்த நான்கையும் தெளிவான அறிவுடையார் சிந்திக்க

மாட்டார்களாம். சிந்தித்தால் பிச்சை வாங்க நேரும், நரகத்தில் வீழ நேரும்; தெய்வம் தண்டிக்கும். -