பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. ஆசாரக் கோவை 2器磐”

'பொய், குறளை, வெளவல். அழுக்காறு இவைாான்கும்.

ஐயம்தீர் காட்சியார் சிங்தியார், சிந்திப்பின் ஐயம் புகுவித்து அருகிரயத்து உயர்த்திடும்; தெய்வமும் செற்று விடும்'

மகளிரோடு சேரக்கூடாத காலம் இவை என்று ஒரு பாடல் சொல்கிறது. உச்சிப்போது, நள்ளிரவு, காலைச் சந்தி, அந்திமாலை, தாயின் சிராத்தநாள், தந்தையின் சிராத்தநாள், பெளர்ணமி, அமாவாசை, அஷ்டமி, பிறந்தநாள் ஆகியவை உடனுறைவுக்கு ஆகாதவையாம்.

உயர்ந்த நிலைமை, ஆண்மை, கல்வி, நல்ல குடிப் பிறப்பு இவை உேடையவர்களை அறிந்து கொள்வதற்கு ஏற்ற அடையாளங்கள் எவை? அவர்களை உடையாலும் நடையாலும் கண்டு கொள்ளலாம்; சொல்லின் செல் வாக்கினாலும் உணரலாம்; அவர்கள் வையும் வசவில்கூட. இனம் கண்டு கொள்ளலாம். .

'உடை, நடை, சொற்செலவு. வைதல் நான்கும் நிலைமைக்கும் ஆண்மைக்கும் கல்விக்கும் தத்தம் குடிமைக்கும் தக்க செயல்'

- இவற்றில் வைதல் என்பது மிக நுட்பமானது. இழிந்த வர்கள் வையும் வசவுக்கும், உயர்ந்தவர்கள் வையும் வசவுக்கும் நன்றாக வேறுபாடு தெரியும். -

விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு உணவு மட்டும் ஊட்டினால் போதுமா? அவர்களுக்கு ஐந்து வகையாக உபசாரம் செய்ய வேண்டுமாம்.புன்னகை பூக்க வேண்டும்: இனிய உரை பகர வேண்டும்; கால் நீர் தந்து வரவேற்க வேண்டும்; மனையில் இருக்கச் செய்ய வேண்டும்; பாயும்.

கட்டிலம் கொடுக்க வேண்டும். . . . . . . . .