பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஆசாரக் கோவை 240

"முறுவல், இனிதுரை, கால்நீர், மனை: பாய், கிடக்கையோடு இவ்வைந்தும் என்பதலைச்சென்றார்க்கு ஊணொடு செய்யும் சிறப்பு.'

நாம் ஒரு வழியில் நடந்து போகிறோம்; எதிரே சிலர் வருகிறார்கள். அவர்களுக்கு வழிவிட்டு நடக்கவேண்டு மாம். அப்படி வழி விடுவதற்குரியவர்கள் அந்தணர், முனிவர், சுமை குாக்கி வருபவர், நோயாளிகள், இளங் குழந்தைகள், பசு மகளிர்.

இப்படிப் பல வகையான ஆசாரங்களை ஆசிரியர் தொகுத்துச் சொல்கிறார். அவை முழுவதும் இக்காலத் துக்கு ஏற்புடையவை என்று சொல்ல முடியாவிட்டாலும் இக்காலத்திலும் மேற்கொள்வதற்குரிய பல கருத்துக்கள் உள்ளன. மற்றவை, அவ்வக் காலத்தின் நிலைக்கு ஏற்பக் கடைப் பிடித்துவந்தலை என்று தெரிந்து கொள்ள உதவும். - - -