பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பழமொழி

காட்டில் படித்தவர். படியாதவர். ஆண், பெண், குமரன், கிழவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக் கும் தெரிந்தவை பழமொழிகள். மனிதர்கள் தம் அநுபவத்தால் தெரிந்தவற்றை எளிதான சுருங்கிய வடிவத்தில் அமைத்துச் சொல்ல. பழங்கால முதலே. வழங்கி வருபவை பழமொழிகள். பழமொழிகளில் ஒரு நாட்டின் பண்பாட்டையே கா ன லா ம். மனித வாழ்க்கைக்கே பொதுவான பழமொழிகளும் சில, வகுப்பினருக்கு உரிய பழமொழிகளும் சில தொழிலைப். பற்றிய பழமொழிகளும் என்றுஅேவை பல வகைப்படும். மிக நுட்பமான வேதாந்தக் கருத்தைச் சொல்லும் பழ மொழிகளும் உண்டு. சபையிலே சொல்லத்தகாத இடக் கர்ப் பழமொழிகளும் உண்டு. தமிழில் வழங்கும்.

பழமொழிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. * . . . . . .

பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றான பழமொழி' என்னும் நூலில் நானூறு வெண்பாக்கள் இருக்கின்றன.

அதனால் அதற்குப் பழமொழி நானூறு என்ற பெயரும்

வழங்கும். ஒவ்வொரு வெண்பாலலும் இறுதியில் ஒரு. பழமொழி இருக்கும். அந்தப் பழமொழியின் கருத்தை, விளக்கும் பகுதி வெண்பாவின் முதலில் இருக்கும். இடையில் ஆட்வர் ஒருவரை விளித்துச் சொல்லும் ஆடுஉ