பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தமிழ் நூல் அறிமுகம்

முன்னிலையும், பெண்ணை விளித்துச் சொல்லும் மகடுஉ முன்னிலையும் சில பாடல்களில் இருக்கும்.

இதன் ஆசிரியர் முன்றுறை அரையனார். முன்றுறை என்பது அவர் ஊரென்றும், அரையனார் என்பது அவர் பேரென்றும் கொள்ள வேண்டும்.

சபிண்டியின் கீழற் பெருமான் அடிவணங்கிப்

பண்டைப் பழமொழி கானுாறும்-கொண்டினிதா முன்றுறை மன்னவன் கான்கடியும் செய்தமைத்தான், இன்துறை வெண்பா இவை'

என்ற சிறப்புப் பாயிரத்தால் அவர் சைன சமயத்தினர் என்று தெரிய வருகிறது.

பழமொழிகளை ஈற்றில் வைத்துப் பாடிய தண்டலை யார் சதகம், கோவிந்த சதகம், இரத்தின சபாபதி மாலை முதலிய நூல்கள் தமிழில் இருந்தாலும் இந்தப் பழமொழி நானூறு எல்லாவற்றுக்கும் முந்தியது. அக்காலத்திலே புலவர்களுக்குப் பழமொழியிடம் இருந்த மதிப்பு இதனால் தெரிய வருகிறது.

பழமொழி நானூற்றில் நானுாறு பழமொழிகள் வருகின்றன. அவற்றில் இக்காலத்தில் வழங்காத பல பழமொழிகளைக் காணலாம். செய்யுளில் அமைக்கும் போது வழக்கிலுள்ள சொற்களை அப்படியே வைத்துப் பாட முடியாது. ஆதலால் அந்தப் பழமொழிகள் எந்த வடிவத்தில் அக்காலத்தில் வழங்கின என்று தெரிய வில்லை. இக்காலத்தில் வழங்கும் பழமொழிகள் வேறு உருவத்தில் வேறு சொற்களோடு அமைந்திருக்கின்றன.

இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. முதல் இரு

நூறு செய்யுட்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில்

தலைமையாசிரியராக இருந்த திரு நாராயணையங்கார் எழுதிய அழகான உரை ஒன்று உண்டு. அதில் இந்: