பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பழமொழி - 243

57ದಿನ உள்ள பழமொழிகள் இக்காலத்தில் எப்படி வழங்குகின்றன என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாம்பறியும் பாம்பின் கால்' என்ற பழமொழி இப்போதும் வழக்கில் உள்ளது. அந்தப் பழமொழிக்குக் கருத்துக் கூறி அதை இறுதியிலே வைத்து அமைத்த பாட்டு இது:

  • புலம்மிக் கவரைப் புலமை தெரிதல்

புலம்மிக் கவர்க்கே புலனாம்;-கலம்மிக்க பூம்புனல் ஊர, பொதுமக்கட்கு ஆகாதே; பாம்பறியும் பாம்பின கால். (1)

அறிவினால் மிகுந்தவருடைய புலமையைத் தெரிந் துணர்தல் என்பது அறிவில் மிக்கவ்ர்க்கே தெளிவாகும். நன்மை மிக்க பொலிவையடைய பனல் வளம் பெற்ற ஊருக்குத் தலைவனே, சாதாரண மக்களுக்கு இந்தத் தெளிவு உண்டாகாது. பாம்பு அறியும் பாம்பின் கால் என்பது இதன் பொருள். இப்பாட்டில், நலம் மிக்க பூம்புனல் ஊர' என்பது ஆடுஉ முன்னிலை. -

அந்தக் காலத்தில் மாட்டை ஒட்டக் கறக் மாட்டார்கள்; கன்றுக்கு வேண்டியதை விட்டு விட்டே கறப்பார்கள். ஆகையால் அந்தப் பழங்காலத்தில், "கன்று சாகக் கறப்பார் உண்டோ?' என்ற பழமொழி எழுந்தது. சென்னைக்கு வந்து இப்போது பார்த்தால், கன்றைச் சாகச் செய்து அதன் தோலுக்குள் வைக்கோலை அடைத்துப் பசுவை ஏமாற்றிக் கறக்கும் காட்சியைக் காணலாம். அந்தப் பழமொழி இந்தக் காலத்துக்கு உதவாமல் போயிற்று. ஆனாலும் பழமொழி பழமொழி தானே? புலவர் அதை எப்படி வைத்துச் சொல்கிறார். பாருங்கள். - -- .