பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24较 தமிழ் நூல் அறிமுகம்

நட்புப் பொருந்தித் தாம் ஒரு நல்ல நிலையில் நிறுத்தி: வாழச் செய்தவர்களை, நேரே கண்ட பிழைகள் அவர் களிடம் இருந்தன என்றாலும், கோபித்து வெறுக்க மாட்டார்கள். தம்முடைய கன்று சாகும்படி தாய்ப் பசுவின் பாலைக் கறப்பார் யார் இருக்கிறார்கள்?' என்ற. பொருளுடையதாக அமைகிறது அந்தப் பாடல்.

'கண்புஒன்றித் தம்மாலே காட்டப்பட் டார்களைக்

கண்கண்ட குற்றம் உளஎனினும் காய்ந்தியார்; பண்கொண்ட தீஞ்சொற் பனைத்தோளாய், யார்உளரோ தம்கன்று சாக்கறப் பார்?' .

(காய்ந்தீயார்-காயார்; வெறுக்க மாட்டார்கள். பண் கொண்ட தீஞ்சொல் பனைத் தோளாய்-இராகத்தின் தன்மையைக் கொண்ட இனிய சொல்லையும் மூங்கிலைப். போன்ற தோளையும் உடைய பெண்ணே, இது மகடூஉ முன்னிலை, பணை-மூங்கில், சாக்கறப்பார்- சாவக் கறப்பவர்.) -

'சர்க்கரையோடு சேர்ந்த மணலைத் தின்னலாமோ?"

என்று ஒரு பழமொழி முன்பு வழங்கியிருக்க வேண்டும்

  • தினல் ஆமோ அக்காரம் சேர்ந்த மணல்' என்று அந்தப் பழமொழியைப் பாட்டுக்கு ஏற்ற வகையில் சொற்களை

அமைத்து ஆளுகிறார் ஆசிரியர் அந்தக் கருத்தை விளக்க அவர் கூறும் செய்தி வருமாறு; இழிந்த குணம் உடைய சில சிறுமைத் தன்மை உடையவர்கள் நல்ல சார்புடைய வர்களோடு பழகுகிறார்கள், அவர்களுக்கு நண்பராகவே. காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறுமைத் தனம் போவதில்லை. அத்தகைய மட்டமான ஆசாமிகளை

இவர்கள் நல்லவர்களுக்கு நண்பாகளென்று எண்ணி அவர்களையும் பெரியவர்கள் என்று தெளியாலாமோ? அறிஞர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்' என்று: சொல்லி விட்டு, சர்க்கரையோடு சேர்ந்திருக்கிறதே.