பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பழமொழி 245

என்று எண்ணி மணலையும் சேர்த்துச் சாப்பிடலாமோ?" என்று பழமொழியை வைத்துக் கேட்கிறார்.

'தக்காரோடு ஒன்றித் தமராய் ஒழுகினார்

மிக்காரால் என்று சிறியாரைத் தாம்தேறார்; கொக்கார் வளவயல் ஊர, தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்?’’

[தக்கார்-குணங்களால் தகுதி பெற்றவர்; யோக்கியர். தமர்-நண்பர்.மிக்கார்-மேலானவர் தாம் என்றது அறிஞர் களைக் குறித்தது. தேறார்-தெளிய மாட்டார்கள்.கொக்கு ஆர் வளவயல் ஊர-மாமரங்கள் நிறைந்த வளமான வடில் களை உடைய ஊரனே; இது ஆடுஉ முன்னிலை.கொக்குகள் நிரம்பிய வயல் என்றும் சொல்லலாம். அக்காரம். சர்க்கரை.) -

கடலிலே நீச்சல் போட்டவன் கன்றுக்குட்டி மிதித்த பள்ளத்தில் ஆழ்ந்து விட்டானாம்' என்பது ஒரு பழமொழி என்று தெரியவருகிறது. அந்தப் பழமொழியை முடிவில் வைத்து ஆசிரியர் புலால் உண்ணாமையை வற்புறுத்துகிறார். விடுவதற்கரிய வலிமையை உடைய பெரிய ஆசைகளை யெல்லாம் நீக்கிவிட்டு, எல்லோரும் எளிதாகப் போக முடியாத சன்மார்க்கத்தில் நின்ற வர்கள், பிற உயிருக்குத் துன்பம் செய்வதை உடையதாய் உள்ள புலாலை உண்ணுதல், கடலை நீந்திக் கடந்தவன் கன்றுக்குட்டி கால் வைத்த பள்ள நீரில் அமிழ்ந்து விடுவதை ஒக்கும்!" - விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய கன்னெறிக்கண் நின்றார்-இடர்உடைத்தாய் பெற்ற விடக்கு நுகர்தல் கடல்ந்ேதிக் கன்றடியுள் ஆழ்ந்து விடல். Iதுப்பு - வலிமை. வேட்கை.மண் ணாசை, பெண்ணாசை பெர்ன்னாச்ை ஆகியிபெரிய் ஆசைகள்.

த-16 S S S AAAAAS S