பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ் நூல் அறிமுகம்

படர்வு அரிய-செல்லுவதற்கு அரிய இடர் உடைத்தாய்ப் பெற்ற விடக்கு-பிற உயிருக்குத் துன்பமுடையதாகப் பெற்ற ஊனை. கன்று அடி-கன்றுக்குட்டி அடி வைத்த பள்ளத்து நீர்.1 -

இந்தப் பாட்டில் எந்த முன்னிலையும் வரவில்லை. இவ்வாறு உள்ள பாடல்கள் பல பழமொழியில் உள்ளன.

"நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பது நாம் அறிந்த பழமொழி. 'கற்பினால் மனத்தை நிறுத்த இயலாத பெண்களைத் தடுத்துச் சிறையினால் அடக்கி விடுதல் முடியாது; வலுவில் நாய் வாலைக் கட்டி வைத் தாலும் அது என்றும் நிமிராது' என்று பழமொழியை இணைத்து ஒரு கருத்தைச் சொல்கிறார். "நிறையான் மிகுகலா கேரிழை யாரைச்

சிறையான் அகப்படுத்தல் ஆகா;-அறையோ! வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால் திருந்துதல் என்றுமே இல்."

(நிறையால்-கற்பினால், மனத்தைப் பிறரிடத்து ஓடாமல் நிறுத்தும் மனவலியால். அறையோ ஐயோ என்பது போன்ற இரக்கக் குறிப்பு. யாப்பினும்கட்டினாலும்.1 - -

இந்தப் பாடலில், 'சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை' என்ற திருக்குறளின் சொல்லும் பொருளும் கலந்துள்ளன. இப்படியே வேறு சில பாடல்களில் திருக்குறள்,நாலடியார் முதலிய நூல்களில் வரும் சொல்லும் பொருளும் இணைந்து விளங்குவதைக் காணலாம். - x -

"கற்றவனுக்கு வேண்டாம் - கட்டுச் சோறு என்ற பழமொழியையே விரித்து விளக்கும் பாடல் இது:

ஆற்றவும் கற்றார் அறிவுடையர்ர்: அ.துடையார் கால்திசையும் செல்லாத காடுஇல்ல்ை, அக்காடு