பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பழமொழி 2.47

வேற்றுகா டாகா: தமவேஆம். ஆயினால் ஆற்றுனா வேண்டுவது இல்."

(மிகவும் கற்றவர்கள் அறிவுடையவர்கள்; அந்த அறிவுடையவர்கள் நான்கு திசையிலும் போக முடியாத நாடுகள் இல்லை; அவர்கள் எங்கே போனாலும் அந்த நாடுகள் அயல் நாடுகள் ஆகா தம்முடைய சொந்த நாடுகளாகவே ஆகும்; அப்படி ஆகுமானால் அவர்களுக்கு வழியிலே உண்ணுவதற்குக் கட்டுச்சோறு வேண்டுவ தில்லை. ஆற்றவும்-மிகவும், ஆற்றுணா-கட்டுச் சோறு.1

'யாதானும் தாடாமால் ஊராமல்; என்னொருவன், சாந்துணையும் கல்லாத வாறு' என்ற குறளின் கருத்தை இதில் பார்க்கிறோம்.

"புலி பசித்தால் புல்லைத் தின்னாது என்ற பழ மொழியை வைத்த பாட்டு வருமாறு:

'ஒற்கம்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்

கிற்பவே கின்ற நிலையின்மேல்; வற்பத்தால் தன்மேல் கலியும் பசிபெரிது ஆயினும் புல்மேயாது ஆகும் புலி.”

(பொருள் முதலியவற்றால் தளர்ச்சியைத்தாம் அடைந்த காலத்திலும் குணங்களால் உயர்ந்த பெரியவர்கள் தாம் நின்ற ஒழுக்க நிலையில் மாறாமல் நிற்பார்கள். பஞ்சத் தால் தன்னைத் துன்புறுத்தும் பசி மிகுதியானாலும் புலி புல்லை மேயாதாம். ஒற்கம்-தளர்ச்சி. நிற்ப-நிற்பார்கள். வற்பம்.வறுமை, பஞ்சம்.) . ।

உயிர் இருந்தால் எப்படியும் பிழைத்துக் கொள்ள

என்ற வேறுருவத்தில் இவர் அமைக்கிறார்.

'மீனுக்குப் பூனையைக் காவல் வைத்தது போல என்ற