பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தமிழ் நூல் அறிமுகம்

பழமொழியை, "பூசையைக் காப்பிடுதல் புன் மீன் தலை' என்ற வடிவத்தில் ஆள்கிறார். இப்படியே, "திங்களை நாய் குரைத்தற்று' என்ற வடிவில், சந்திரனைக் கண்டு நாய் குரைத்தாற்போல என்ற பழமொழியும், நாய் பெற்ற தெங்கம்பழம்' என்பதில் நாய்க்கு முழுத் தேங்காயை உருட்டினாற் போல’ என்று நாம் வழங்கும் பழமொழியும், துளி ஈண்டில் வெள்ளம் தரும்' என்பதில், பல துளி பெரு வெள்ளம்” என்பதும், 'நெடு வேல் கெடுத்தான் குடத்துள்ளும் நாடி விடும்' என்பதில், 'யானையைக் கெடுத்தவன் பானையிலும் தேடுவ்ான்' என்பதும் அடங்கியிருத்தலைக் காணலாம்.

'நிறை குடம் தளும்பாது என்பதை 'நிறை குடம் நீர்தளும்பல் இல்' என்றும், "நாயைக் கண்டால் கல்லைக் கானோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதை, 'நாய் காணிற் கல் காணாவாறு' என்றும் "ஏறவிட்டு ஏணியை வாங்கினாற் போல என்பதை :மச்சேற்றி ஏணி களைவு' என்றும், ஊர் ஒட ஒக்க ஒடு' என்பதை, 'ஒடுக ஊர் ஒடுமாறு' என்றும் ஆளுவர்.

“நரை ஆன் புறத்திட்ட சூடு மாயா' (வெள்ளைப் பசுவின் மேல் இட்ட குடு மறையாது), "மோரின் முது நெய்தீதாகலோ இல்' (மோரைப் போல பழைய நெய். தீயதாவது இல்லை). 'முறைமைக்கு மூப்பு இளமை இல்' (தண்டனை செய்வதற்கு மூத்தவன் இளையவன் என்று. வேறுபாடு இல்ல்ை).'ஆகாதே உண்டது நீலம் பிறிது" (நீல நிறம் வேறு நிறத்தோடு சேர்ந்தால் வேறு நிறம் ஆகாது), "ஈனுமோ வாழை இருகால் குலை.' ச.அணியெல்லாம் ஆடையின் பின், 'யானை போய் வால் 'போக்ாதவாறு', 'நல்ல விறகில் அடினும் தனிவெந்நீர் இல்லம் சுடுகலாவாறு' (நல்ல விறகினால் எவ்வளவு அாய்ச்சினாலும்.நன்றாகக் கொதிக்கும் வெந்நீர் வீட்டைச்