பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பழமொழி 249

சுடாதது போல), வரையகத்து ஈண்டிய கல்தேயும், தேயாது சொல்' என்பன போன்ற பழமொழிகள் இந்தக் காலத்தில் வழங்குவதாகத் தெரியவில்லை,

இவ்வாசிரியர் சில இடங்களில் புராண இதிகாசங் களில் வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார். கண்ணன் யமுனையில் விளையாடியது, திருமாலானாலும் குற்றம் செய்தால் பழியுரை போகாமை; உலகத்தை மால் அளந்தது, கண்ணின் பசுமாடுகளைக் காத்தது ஆகியவை திருமாலைப் பற்றிய செய்திகள். சிவபெருமான் உமா தேவியை ஒரு பாகத்தில் வைத்திருப்பதும் இடபக் கொடியை ஏந்துவதும் ஒரு பாட்டில் வருகின்றன.

இராமனுடைய துணைவனாகச் சென்று வீடணன் இலங்கைக்கு அரசன் ஆனது, இராவணன் இராமனைப் பகைத்துப் போரில் தோற்றது ஆகிய இராமாயண நிகழ்ச்சிகள் வரும் பாடல்கள் சில.

பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்குப் பலராமன் படைத்துணை ஆகாதது, பஞ்ச பாண்டவரும் துரியோதனாதியரோடு சூதாடிப் பிறகு போர் மூண்டு நூற்றுவர் உயிரிழந்தது, தருமபுத்திரர் நரகத்தைக் கண்டது, பஞ்ச பாண்டவர் அரக்கு மாளிகையில் புகுந்தது ஆகியவை இதில் வரும் பாரதச் செய்திகள்.

கரிகால் சோழன் தன்னை அறங்கூறவையத்தில் முதியவனாகக் காட்டிக் கொள்ள நரை முடித்தது, கழுமலத்திலிருந்து புறப்பட்ட யானை கருவூரிலிருந்த கரிகாலனை ஏற்றி வந்தது, கரிகாலன் இரும்பிடர்த் தலை யார் என்ற மாமனால் நலம் பெற்றது, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் வரலாறு, மனுச் சோழன் தன் மகனைத் தேர்க்காலில் ஊர்ந்தது, பொற் கைப் பாண்டியன் கதை என்பவை முடி மன்னர்களைப்