பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தமிழ் நூல் அறிமுகம்

"மல்இவர்தோள் மாக்காயன் மாணாக்கன்,மாநிலத்துப்

பல்லவர் நோய்தீர்க்கும் பாங்கினால்-கல்லா மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி யாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான்' என்னும் சிறப்புப் பாயிரத்தால் இந்தச் செய்திகள் தெரிய வருகின்றன. -

கடவுள் வாழ்த்து ஒன்றும் மேலே 102 பாடல்களு மாக 108 வெண்பாக்கள் அடங்கிய நூல் இது. இதன் கடவுள் வாழ்த்தால் இதன் ஆசிரியர் சைன சமயத்தினர் என்று புலனாகிறது. பல இடங்களில் கொல்லாமையை யும் புலால் உண்ணாமையையும் எடுத்துச் சொல்கிறார் இவ்வாசிரியர். " . . .

பஞ்சாமிர்தம் என்பது நமக்குத் தெரியும்; ஐந்து வேறு சரக்குகள் சேர்ந்து கலந்த அபிடேகப் பொருள் அது. காரியாசான் சிறு பஞ்ச மூலத்தில் ஒரு பஞ்சாமிர் தத்தைச் சொல்கிறார். கற்புடைய பெண் ஒர் அமிர்தம்; நன்றாகக் கற்று அடங்கியவன் ஒர் அமிர்தம்; நல்ல விளைவு முதலிய நன்மைகளை உடைய நாடு ஒர் அமிர்தம் நன்மையுடைய மேகம் மழையைப் பெய்யும்படி ஆட்சி நடத்தும் அரசன் ஓர் அமிர்தம்; நமக்கு நல்லதைச் செய்யும் பணியாள் ஒர் அமிர்தம். >

'கற்புடைய பெண்அமிர்து, கற்றுஅடங்கி னான்அமிர்து:

கற்புடைய நாடுஅமிர்து; காட்டுக்கு-கற்புடைய மேகமே சேர்கொடி வேந்துஅமிர்து, சேவகனும் ஆகவே செய்யின் அமிர்து. (நற்பு-நன்மை. மேகமே சேர் கொடி வேந்து-மேகங்கள் சேர்வதற்குக் காரணமான கொடியைப் பிடித்த அரசன். சேவகன்-வீரனும் ஆம். ஆகவே செய்யின்- அழிவின்றி. நன்மைக்குரியவற்றையே செய்தால்.

பிறருடைய குற்றத்தைப் பெருந்தன்ம்ையால் மன் னித்து விடுதல் பெருமையான குணம். ஒருவர் செய்த