பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. சிறு பஞ்ச மூலம் 253

திங்கையே எண்ணிக்கொண்டிருத்தல் சிறுமைக் குணம்

பகைவர்கள் கெடும்படி செய்து வாழும் வாழ்க்கையில்

அமைதி இருக்கும்; அது நல்லது. பல பொருளை ஈட்டி வேண்டிய வசதிகளோடு, பிறரை இரவாமல், பிறர்

நம்மைப் பழி கூறாமல் வாழ்வது நல்லது. இப்படி ஐந்து

கருத்துக்களை ஒரு பாட்டிலே சொல்கிறார். -

'பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை,

இழைத்ததீங்கு எண்ணி இருத்தல்;-பிழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளால், பல்லார் ககைகெட வாழ்வதும் கன்று. -

(பிழைத்த பிறர் செய்த குற்றங்களை. இழைத்தசெய்த நகை கெட - பழித்துச் சிரிக்கும் சிரிப்புக் கெடும் படியாக) - - - - ‘. .

மரங்கள் பெரும்பாலும் பூத்துப் பிறகு காய்க்கும். பூத்தாலும் காய்க்காமல் இருக்கும் மரங்களும் உண்டு. நூலைக் கற்றவர்கள் தன்மையை அறிவார்கள்; வயசு, ஏற ஏற அவர்களுடைய அறிவு விளக்கம் ப்ெறும். ஆனால். நூல்களைக் கல்லாதவர்கள் விலங்கைப் போல எவ்வளவு வயசானாலும் அறிவு முதிர்ச்சி பெறமாட்டார்கள். சில விதைகள் விதைத்தாலும் முளைப்பதில்லை. அறிவில்லாத வனுக்கு எத்தனை சொன்னாலும் மூளையில் ஏறாது. இப்படி ஐந்து கருத்துக்களை ஒரு பாடல் சொல்கிறது.

'பூத்தாலும் காயா மரம் உள, கன்றுஅறியார்.

மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார்;-பாத்திப் புதைத்தாலும் நாறாத வித்துஉள; பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது உணர்வு.”

மூேவார் - அறிவு முதிர்ச்சி பெறார். தேற்றார்-கற்றுத் தெளியாதவர்கள். பாத்தி-செடி வளரும் பாத்தி. நாறாத", முளைக்காத பேதை-அறிவிலி, உணர்வு-அறிவு.)