பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தமிழ் நூல் அறிமுகம்

"நான் ஏதோ வாயினாலே சொல்லுகிறேன் என்று: எண்ணாதீர்கள். இது காலம் காலமாக வந்த வழக்கு: அநுபவத்தால் உணர்ந்த தெளிவு' என்று ஐந்து நீதிகளை ஒரு பாட்டில் சொல்கிறார் இவ்வாசிரியர்.

பெருமைக்குரிய பண்புடையவர்களை நாடிச்சேர்ந்து வாழுங்கள்; பிறனுடைய பொருளைத் திருடாதீர்கள்; இழிந்த குணம் உடையவர்களுடைய நட்பை விட்டு விடுங்கள்; கெட்ட சொற்களே பேசாமல் ஜாக்கிரதை யாக இருங்கள்; காலன் ஒரு நாள் வருவது நிச்சயம்" என்று அறிவுறுத்துகிறார். - -

"பெருங்குணத்தார் சேர்மின்; பிறன்பொருள் வவ்வன்மின்;

கருங்குணத்தார் கேண்மை கழிமின்;-ஒருங்குணர்ந்து திச்சொல்லே காமின் வரும்காலன், திண்ணிதே; வாய்ச்சொல்லே அன்று, வழக்கு." (சேர்மின்-சேருங்கள். வவ்வன்மின்-பறித்துக் கொள் ளாதீர்கள்.கருங்குணத்தார்கேண்மை-இழிந்தகுணமுடைய வருடைய நட்பை. ஒருங்கு உணர்ந்து-எல்லாவற்றையும் ஒரு சேரச் சிந்தித்து. காமின்-பேசாமல் அடக்கிக் கொள் ஆளுங்கள். வரும் காலன்- ஒரு காலத்தில் யமன் வருவான். திண்ணிது-இது உறுதி. வழக்கு-அடிப்பட்ட உண்மை.)

நல்ல நூல்களைக் கற்றவன் நன்றாகவும் அழகாகவும். பேசுவான். சிலர் பேசுவதை அப்படியே எழுதி நூலாக் கலாம். நாம் பேசவேண்டுமானால், பெரியவர்கள் இயற். றித்தந்துள்ள நூல்களில் கூறியுள்ள முறைக்கு ஏற்றபடி பேசவேண்டும் பொய், கடும்சொல், பயனில்லாதசொல். கோள் ஆகியவற்றைச் சொல்லக் கூடாது என்று. நூல்கள் கூறும். அவை நூற்கு இசைந்த சொற்கள் அவ்ல. இப்படி நினைப்பூட்டிக் கொள்ளும்படி, "நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு' என்று. ஒரு பாட்டில் இவ்வாசிரியர் அடித்துச் சொல்லு: