பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/268 தொடுக்கப்பட்டது.

35. சிறுபஞ்சமூலம் 255.

கிறார்.உடம்பு அழகாக இருந்தால் போதாது;உறுப்புக்கள் அழகாக இருப்பது உண்மை அழகு ஆகாது;நல்ல சொற்களை, பெரியவர்கள் சொன்ன நூல்களோடுபொருந்தி அமைந்த சொற்களை சொல்லுவதுதான் அழகு"என்று சொல்லும்போது, இவை வனப்பு அல்ல.என்று ஐந்து வனப்புகளைச் சொல்கிறார்.

'மயிர்வனப்பும்,கண்கவரும் மார்பின் வனப்பும், உகிர்வனப்பும்,காதின் வனப்பும்,-செயிர்தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பு அல்ல; நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு'

(உகிர்- நகம். செயிர் தீர்ந்த- குற்றம் நீங்கிய1.

ஒளவையார் சோழ அரசனுடைய அவைக்களத்தில் அமர்ந்திருந்தார்.வேறு பல புலவர்கள் அங்கே இருந்தார்கள்.

  அப்பொழுது புலவர்கள் எல்லோரும் சோழ,மன்னனைப் பல படியாக வாழ்த்தினார்கள்; பாட்டாலும்,உரையாலும் விரிவாக வாழ்த்திப் பாராட்டினார்கள். கடைசியில் ஒளவையார் வாய் திறந்தார்;

"வரப்புயர'

என்று சுருக்கமாகச் சொல்லி விட்டுச் சும்மா இருந்தார். 'இவ்வளவுதானா? என்ற எண்ணத்தோடு எல்லோரும் அவர் முகத்தையே நோக்கினார்கள், அவர்களுடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்த ஒளவையார்,

    "நான் சொன்ன வாழ்த்துச் சொல்லளவில் சுருக்கமாக இருந் தாலும்,பொருளளவில் விரிவானது.

. வரப்பு உயர் நீர் உயரும்; . நீர் உயர நெல் உயரும்; . நெல் உயரக் குடி உயரும்; . குடி உயரக் கோ உயர்வான்'

     என்று விளக்கம் கூறவே, யாவரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்:இப்படி ஒரு வரலாறு வழங்கி வருகிறது.

ஒளவையார் கூறிய விளக்கத்தை அப்படியே சொல்லும் பாடல் ஒன்று சிறுபஞ்ச மூலத்தில் இருக்கிறது.