பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தமிழ் நூல் அறிமுகம்

வார்சான்ற கூந்தல், வரப்புயர, வைகலும்

நீர்சான் றுயரவே கெல்உயரும்;-சீர்சான்ற தாவாக் குடிஉயரத் தாங்கரும் சீர்க் கோஉயர்தல் ஒவாது உரைக்கும் உலகு."

{வார் சான்ற கூந்தல் - நீளத்தை உடைய கூந்தலை உடைய பெண்னே; இது மகடூஉ முன்னிலை, வைகலும்நாள்தோறும். நீர் சான்று-நீர் நிரம்பி தாவா-குறை வில்லாத. தாங்கு அரும் சீர்க் கோ - மக்களைத் தாங்கு கின்ற அரிய சிறப்பையுடைய அரசன். ஒவாது-நீக்கமின்றி, உலகு-உயர்ந்தோர். இதில் ஐந்து உயர்வுகள் வந்தன.i

இவர் கூறும் கருத்துக்களில் சில வருமாறு : இராகத் துக்கு அழகு, கேட்டவர்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்லுதல் (பண்வனப்புக் கேட்டார் நன்று என்றல்): ஒர் உயிரைக் கொன்று உண்பவன் நாக்கு வீணாகி விடும் (கொன்று உண்பான் நாச் சாம்); தமிழை நன்றாகக் கற்றுத் தெளியாதவன் கவி இயற்றுதல் சிரிப்புக்கு இடமாகும் (செந்தமிழ் தேற்றான் கவி.செயலும் நாவகம் மேய் நாடின் நகை); எல்லாம் அறிபவன் யாரும் இல்லை (ஒருவன் அறிவானும் எல்லாம் இல்) ; தெய்வத்தை எப் போதும் விளக்கமாக வழிபடுதல் பெண்களுக்குச் சிறப்பு (தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு); கோயிலையும் சாலையையும், நிறுவுதல் நல்லது (நன்று தளி சாலை நாட்டில்); கன்றுக் குட்டி சாகும்படி பாலை ஒட்டக் கறத்தல் கூடாது (கன்று சாவப் பால் கறவாமை), செத்த கன்றின் தோலைக் காட்டிக் கறப்பது தவறு (தோற்கன்று காட்டிக் கறவார்., ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து கருத்துக்களைச் சொல்லுவது என்ற திட்டத்தோடு பாடியதால், பல பாடல்களில், இதில் சொல்லப் பெற்ற ஐத்து நீதிகள் எவையென்று தேட வேண்டியிருக்கும். - - இந்த நூலுக்குப்பழைய உரை ஒன்று உண்டு.