பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. முதுமொழிக் காஞ்சி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அளவினால்

சிறிய முதுமொழிக் காஞ்சி. இந்த நூலில் உள்ள வரிகள்

110. முதுமொழிக் காஞ்சி என்பது புறத்துறைகளில் ஒன்று. அதன் இலக்கணத்தை,

பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று'

என்றுபுறப்பொருள்வெண்பாமாலைசொல்கிறது. பலரும் புகழும் அறிவுடைய புலவர் பெருமக்கள் பலபடியாக்ச் சொல்லி அறியத்தக்க உலக இயல் உண்மைகளைத் தெளி வாகச் சொல்வது என்பது இதன் பொருள். உலகியலை அறிந்து, எப்படி வாழவேண்டும் என்று கூறும் நீதி என்பது கருத்து. முதுமொழிக் காஞ்சி என்னும் நூல் அத்தகைய நீதிகளைக் கூறுகின்றது. - - - r

முதுமொழி என்பதற்குப் பழமொழி என்றும்பொருள் கொள்வர், முதுவாய் இரவல' என்று பத்துப்பாட்டில் வரும் தொடருக்கு அறிவு வாய்ந்த புலவனே! என்று நச்சினார்க்கினியர் பொருள் உரைத்தார். அதனால் முது என்பது அறிவைக் குறிக்கும் என்று தெரிகிறது. அறிவு நிரம்பிய மொழிகள் அமைந்த நூல் எனப்பொருள். கொள்ளலாம். காஞ்சி என்பது இடையில் அணுகியும் பல மாலைகள் கோத்த மேகலை வகையாகும், பல நீதிகளைக் கோத்த நூலாதலின் காஞ்சி என அமைந்திருக்கலாழ்.