பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தமிழ் நூல் அறிமுகம்

இந்த நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை, பெரியவர்கள் பெயரைப் பற்றிச் சொல்லும்போது, "ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது' என்ற ஒரு மரபு உண்டு. சங்க நூல்களில் மதுரைக் கணக்காயனார், கோவூர் கிழார், அரிசில் கிழார் என்று ஊரை மட்டும் சொல்லிப் புலவர்களைக் குறிப்பதுபோல இப்புலவரையும் ஊரைச் சுட்டி வழங்கினார் என்று தெரி கிறது. கிழார் என்பது இவர், வேளாளர் என்பதையும், கூடலூர் என்பது இவர் பிறந்த ஊரையும், மதுரை இவர் வந்து வாழ்ந்து சிறந்த ஊரையும் குறிக்கும்.

இந்த நூலில் பத்துப் பத்தாக நீதிகளைச் சொல்லும் பத்துக்கள் பத்து இருக்கின்றன. ஒவ்வொரு பத்தும், 'ஆர்கல உலகத்து மக்கட் கெல்லாம்' என்று தொடங்கு கிறது. சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லை பத்து, பொய்ப் பத்து, எளியபத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து என்பவை இதில் உள்ள பகுதிகள். ஒவ்வொரு பத்திலும் உள்ள நீதிகளில் பொதுவாக ஒரு சொல் வரும். அதையே அந்தப் பத்தின் பெயராக வைத்திருக்கிறார் ஆசிரியர். -

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஒதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை; காதலிற் சிறந்தன்று கண்அஞ்சப்படுதல்"

என்பதில் சிறந்தன்று (சிறந்தது) என்று ஒவ்வொரு வரியிலும் வருவதால் இதற்குச் சிறந்த பத்து என்ற பெயர் அமைந்தது. அறிவுப் பத்தில் ஒவ்வொரு நீதியும் அறிப {அறிவார்கள்) என்று முடிகிறது. இப்படியே மற்றவையும் இருப்பதைக் காணலாம். - . . . . . . .