பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

at. முதுமொழிக் காஞ்சி 259

முதலில் இவ்வாசிரியர் கற்பதைவிட ஒழுக்கம் சிறந்தது என்று தொடங்குகிறார்: 'ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை.”

ஒருவன் நல்ல அறிவுடையவனாக, மேதாவிலாசம் உடையவனாக இருக்கிறான்; ஆனால் அந்த அறிவு விளக்கம் பெற் வேண்டுமானால் மேலும் மேலும் நூல் களைக் கற்றுச் சிந்தையில் தேக்கிக்கொள்ள வேண்டும். "மதிநுட்பம் நூலோ டுடையார்' என்று வள்ளுவர் கூறுவார். நூல்களைப் படிப்பது மட்டும் போதாது. படித்தவற்றை மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள

வேண்டும். படிக்கப் படிக்க மறந்து கொண்டே போனால் ஒட்டைக் குடத்தில் நீர் ஊற்றுவது போல ஆகிவிடும். இந்த உண்மையைச் சுருக்கமாக,

மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை" என்கிறார். மேதை.சிறந்த அறிவு. சிறந்தன்று-சிறந்தது.

நூல்களால் அறிந்து கொள்ளாத பல நுட்பங்களை அதுபவத்தால் அறிந்து கொள்ளலாம். பலருக்கும் பொதுவான அநுபவங்கள் உண்டு: ஒவ்வொருவருக்கும் சிறப்பான சில அநுபவங்களும் உண்டு, அவர்களோடு பழகினால்தான் அந்த அநுபவங்களைத் தெரிந்து கொள்ளலாம். நூல்களைப் படிப்பதனால் தெரிந்து கொள்ள முடியாத பல நுட்பங்களைக் கற்றவர்களை வழிபட்டுப் பழகுவதனால் அறிந்து கொள்ளலாம், குருகுல வாசத்தின் பெருமையே இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். இதனைத்தெரிவிக் கிறார் ஆசிரியர் .. . .

“s ற்றலிற்கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.”

நல்ல குடியில் பிறந்தவனை அவனுடைய அன்பினால் இனம் கண்டு கொள்ளலாம். இதை, பேர் இல்