பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தமிழ் நூல் அறிமுகம்

பிறந்தமை ஈரத்தின் அறிப' என்கிறார் ஆசிரியர் . உள்ளதை வெளிப்படுத்தாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகம் ஒருவனிடம் இருந்தால் அவனை நிச்சயம் கள்வன் என்று தெரிந்துகொள்ளலாம், குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப.’ (அறிபஅறிவார்கள்.) . . . -

ஊருக்கு ஊர் சில பழக்கங்கள் வேறுபடலாம். தேசத் துக்குத் தேசம் ஆசாரம் வேறாக இருக்கும். நம்முடைய பழக்கத்துக்கும் அதற்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் அது அந்த நாட்டில் அடிப்பட்ட வழக்கமாக இருக்கும். அதை நாம் பழிக்கக் கூடாது. “அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்.”

கல்வி கற்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் கல்விக்கு எல்லையுண்டோ கல்வி கரையில' என்று நாலடியாரில் வருகிறது. எல்லாவற்றையும் ஒருவன் கற்றுவிட முடியாது. ஆதலால் நம்முடைய வாழ்வுக்கு எது பயன் தரும் என்று ஆராய்ந்து தேர்ந்து அதற்குரிய கல்வியைக் கற்கவேண்டும். 'ஆராய்ந்து அமைவுடைய கற்பவே' என்பது நாலடியார். இதையே ஒரு வரியிற். சொல்கிறது முதுமொழிக்காஞ்சி.

- "தேராமல் கற்றது கல்வி அன்று."

கல்வியைப் பற்றியும் கொடையைப் பற்றியும் பல கருத்துக்களை இவ்வாசிரியர் சொல்கிறார். * . ,

'ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை...?? "மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை. "கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று:

'கற்ற துடைமை காட்சியின் அறிய. . . . . ."

(காட்சி-அறிவு)