பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. ஏலாதி

ஏலாதி குர்ணம் என்பது ஒரு மருந்து. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு சரக்குகளைக் கொண்டு செய்யும் மருந்து அது பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய ஏலாதி என்னும் நூலுக்கு அந்த ஏலாதி சூர்ணத்தின் பெயரை அதன் ஆசிரியர் அமைத்திருக்கிறார். ஏலாதி என்னும் மருந்தில் ஆறு பண்டங்கள் அமைந்திருப்பது போல, ஒவ்வொரு பாட்டிலும் ஆறு கருத்துக்களை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நூலை இயற் றினார் என்று தோன்றுகிறது. - -

இதனை இயற்றியவர் கணி மேதாவியார் என்னும் புலவர். இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். சிறுபஞ்ச மூலத்தை இயற்றிய காரியாசான் என்பவரும் மாக்காயனாரின் மாணாக்கரே. ஒரு ஆசிரிய ரிடம் பயின்றதில் ஒப்புமை இருப்பதுபோல, நீதி நூலை இயற்றியதிலும், அந்த நூல்களுக்கு மருந்தின் பெயரை வைப்பதிலும் இருவரும் ஒப்புமை உடையவராக இருக் கிறார்கள். கணிமேதாவியார் என்ற பெயரைக் கொண்டு இவர் சோதிடத்தில் வல்லவர் என்று உயத்துணரலாம். ஆாற்பெயர் இவர் மருத்துவத்திலும் பயிற்சி யுடையவர் என்பதைத் தெரிவிக்கிறது. இவரே திணைமாலை நூற்றைம்பதையும் இயற்றியவர். இந்த நூல் எண்பது

பாடல்களால் அமைந்தது. கடவுள் வாழ்த்தில், 'அறு: