பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

했34 தமிழ் நூல் அறிமுகம்

நால்வர் ஆய்புகழ்ச் சேவடி என்று இருபத்து நான்கு. தீர்த்தங்கரரைக் குறிப்பதனால் இவர் சைனசமயத்தினர் என்று தெரிய வருகிறது. - -

இந்த நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. முதல் செய்யுளிலேயே கூறப்படுவன ஆறு என்பதைத். தெரிந்து கொள்ள ஆறு என்று தொகுத்து உரைக்கிறார் ஆசிரியர். நெடுந்துாரம் சென்று பரவிய புகழ், செல்வம், உயர்வாக மதிக்கப்படும் வார்த்தை, வீரம். கல்வி, கொடைத்தன்மை என்ற ஆறும் மறைவழியே ஒழுகுபவர் களுக்கு அழகு என்று தொடங்குகிறார். - -

சென்றபுகழ் செல்வம், மீக்கூற்றம், சேவகம்

கின்றநிலை, கல்வி, வள்ளன்மை என்று அளிவந்தார் பூங்குழலாய் ஆறும் மறையின் வழிவந்தார் கண்ணே வனப்பு." (சென்ற புகழ்-நெடுந்துாரம் பரவியபுகழ். மீக்கூற்றம்மேலாக எடுத்துச் சொல்லும் சொல். சேவகம் நின்ற நிலை-வீரத்தில் நின்ற நிலை, வள் ளன்மை-ஈகை, அளி வந்து ஆர் பூங்குழலாய் - வண்டுகள் வந்து பொருந்தும் பூவை அணிந்த குழலை உடைய பெண்ணே.மறையின்-வழி. வேதநெறி. சைனத்திலும் மறைகளாகிய ஆகமங்கள். உண்டு.)

அளி வந்தார் பூங்குழலாய் என்றது மகடூஉ. முன்னிலை, - -

ஆறு கருத்துக்களைச் சொல்லி ஆறு என்று எண்ணால். குறிப்பிடும் வழக்கத்தை முதற்பாட்டில் காணுவதைப். போலவே, வேறு சில பாடல்களிலும் காணலாம். இவை ஆறும் பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு'(13). என்று ஒரு பாட்டில் வருகிறது. அன்புடையார்களுக்கு உள்ள குணங்கள் ஆறு என்று கூறுகிறார் {68), அவை, சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு,