பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. ஏலாதி 265

உவத்தல், நோதல், பிரிவில் கவறல் என்பவை. அன்புடை யார் சாகும் நிலை வந்தால் தாமும் சாதல், அவருக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தல், அவரோடு இனிய சொல் பேசி அளவளாவுதல், அவரோடு சேர்ந்து பழகி அதனால் மகிழ்ச்சி அடைதல், அவர் துன்புற்றால் தாமும்

துன்புறல், அவர் பிரிந்தால் அதனால் கவலை அடைதல் என்பன அவை. இவற்றைச் சொல்லிவிட்டு, இந்த ஆறும் அன்புடையார்க்கு உள்ளன என்று எண்ணிக்கையோடு

சொல்கிறார்.

சாதல்,பொருள்கொடுத்தல்,இன்சொல்,புணவுர்உவத்தல்

கோதல், பிரிவிற் கவறலே-ஒதலின் - அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக மென்புடையார் வைத்தார் விரித்து.' - (கவறல்-கவலை அடைதல்,மென்புடையார்-மென்மை யான இயல்பை உடையோர்.)

ஆறு கருத்துக்களைக் கூறவேண்டும் என்ற வரை யறையை மேற்கொண்டவர் இவ்வாசிரியர் என்பதை ஏலாதி என்ற நூற்பெயர் தெரிவித்தாலும் எல்லாப் பாடல்களிலும் ஆறு கருத்துக்கள் தெளிவாகக் காணப் படவில்லை. - * .

அவாவை அறுக்க வேண்டும் என்ற நீதியை ஒரு பாட்டில் சொல்ல வருகிறார் ஆசிரியர் அவாவை அறுக்கத் தொடங்கினவன் தளர்ச்சியை அடைய மாட் டான்: ஐம்பொறி வழியே செல்லும் அவாவை அறுத் தால் மிக்க அமைதியைப் பெறுவான்; ஒருவன் அவா அறாமல் இருப்பானானால் பொறிகளாகிய ஐந்து களிறு களால் அலைக்கப்பட்டுக் குகைக்குள் செல்பவனைப் போலத் துன்புற்றுப் போவான் (11)என்று சொல்கிறார்.

அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் வைக்தின் அவா அறுப்பின் ஆற்ற அமையும்;~அவா அறான்