பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தமிழ் நூல் அறிமுகம்

ஆகும் அவனாயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு போகும் புழையுள் புலந்து.'

இந்தச் செய்யுளில் மூன்றே கருத்துக்கள் வரு

கின்றன. - r - .* அறிவுடையவர்கள் மெய்யையே பேசுவார்கள்;. அது இல்லாதவர்கள் பொய், கோள், கடுமையான சொல், பயன் இல்லாத சொல் என்னும் நான்கையும் சொல்வார்கள். இந்தக் கருத்தை சொல்லும் பாடல் . வருமாறு:

"மைஏர் தடங்கண் மயில் அன்ன சாயலாய்,

மெய்யே உணர்ந்தார் மிகஉரைப்பர்;-பொய்யே,

குறளை, கடுஞ்சொல், பயன்இல்சொல் கான்கும்

மறலையின் வாயினவாம் மற்று.

(உணர்ந்தார்.அறிந்தவர். குறளை-புறங் கூறுதல். மறலையின் வாயின-அறத்தை மறுத்த பொல்லாதவர். களின் வாயில் வருவன. மற்று: அசை.) .

இங்கே உணர்ந்தார் மெய்யைச் சொல்வார் என்றும் அல்லாதார் குறளை முதலிய நான்கைச் சொல்வார் என்றும் கூறினார். உணர்ந்தார் பேசுவன, மறலைகள் பேசுவன என்று இரண்டாகப் பிரித்து இதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன என்று சொல்லலாம்; அல்லது பேசுவனவற்றை எண்ணி, மெய், பொய், குறளை, கடுஞ் சொல், பயனில் சொல் என்று ஐந்தைச் சொன்னதாகவும் கொள்ளலாம். எப்படி, ஆனாலும் ஆறு கருத்துக்கள் இதில் உள்ளன என்று சொல்ல இயலாது. மெய்யே உணர்ந்தார் என்று ஒன்றும், மிக உரைப்பர் என்று ஒன்று மாக இரண்டாக்கினால், ஆறு என்ற கணக்கு வரும். ஆனால் அவ்வாறு பிரிப்பதில் தனித்தனிக் கருத்து ஏதும். அமையவில்லை. ஒரு பாட்டில், "இழிகதி இம்முறையான்

ஏழு (61) என்று ஏழைச் சொல்கிறார். ஆகவே,