பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. ஏலாதி 267

இப்பாடல்களில் உள்ள கருத்துக்கள் தெளிவாக ஆறே என்ற வரையறைக்குள் அடங்காமல் குறைந்தும் கூடியும் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். என்ற்ாலும் பெரும்பாலான செய்யுட்களில் ஆறு கருத்துக்களே வருவதால் அந்தப் பெரும்பான்மை கருதி, ஆறு கருத்துக் களைச் சொல்லும் நூல் என்று சொல்லலாம். -

இவர் சைன சமயத்தவராதலின் கொலை, புலை இரண்டையும் நீக்க வேண்டும் என்பதைப் பல இடங் களில் வற்புறுத்துகிறார். கொலை செய்யவேண்டும் என்று எண்ணுதலும், அதைச் செய்தலும் வேறு வேறு குற்ற மாகக் கொள்வதற்குரியன என்பது இவ்வாசிரியர் கொள்கை. ஆகையால், கொலைபுரியான், கொல்லான்' (2), கொல்லான் கொலைபுரியான் (14) என்று இரண் டையும் தனித்தனியே சொல்கிறார். கொலை புரிதல்கொலை செய்வதை விரும்புதல்.

எல்லாத் தானங்களிலும் அன்னதானம் மிகச் சிறந்தது. இந்த நூலில் வரும் நீதிகள் பலவற்றிலும் மிகுதியாக இருப்பது பிறருக்கு உணவு அளிக்கும் அறம். இருபத்த்ைந்து பாடல்களில் ஊணுதவும் அறத்தைச் சொல்கிறார். ஏதும் அற்ற வறியவர்களுக்கு உண்டி, உறையுள், உடுக்கை கொடுக்கிறவர்களையே, பண்டித ராய் வாழ்வார்’ என்கிறார் (9); ஈத்து உண்பவனைத் தேவாதி தேவனாகத் தேறவேண்டும் என்று சொல்கிறார் (82); பிறருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தவர்கள் தேவர்களால் விரும்பப்படுவார்களாம் (38); பசி நீக்கு பவன் விண்ணிலே உயர்வு பெறுவான் (40); பிறருக்கு உணவு ஈந்தவன் அரச பதவியைப் பெறுவான் (42); முனிவர்களுக்கு உணவு வழங்குபவன் மாளிகையில் வாழும் வாழ்வு பெறுவான் (A9), நல்ல சோற்றைப்