பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 தமிழ் நூல் அறிமுகம்

பிறருக்கு வழங்கிப் பிறகு உண்பான் அரசனாகிப் புகழ் பெறுவான் (44); குற்ற மற்ற உணவை வழங்கியவன் அரசாட்சி செய்து வெற்றி பெறுவான் (45); பிறருக்கு ஈந்து உண்பவன் ஏதும் இலா மண் ஆண்டு குடியுடன் வாழ்வான் (46, 41, 48, 51); தவமுடையாருக்கு உணவு வழங்கினவன் குபேரனாக வாழ்வான் (49); அன்புடன் அசனம் கொடுத்தவன் துணைவியுடன் இன்புற்று வாழ் வான் (50); ஊண் ஈந்தவர் பல்யானை மன்னராய் வாழ் வார் (52); தம் வீட்டில் ஊண் ஈந்து உண்பார் படைப் பலம் உடையவராய் வாழ்வார் (53); ஊண் ஈந்து வாழ் வார் பெருஞ்செல்வம் எய்துவர் (58); நாவலந்தீவை ஆள்வர் (56); அருந்தவர்க்கு ஊண் ஈந்தார் வையமும் வானும் ஆள்வர் (70); இவ்வாறு பலபடியாக அன்ன தானத்தால் உண்டாகும் நற்பலன்களைச் சொல்வார்.

ஒரு பாட்டில் இன்னார் இன்னாருக்கு உணவு வழங்கு

பவன் நன்றாக வாழ்வான் என்று சொல்கிறார் வழி நடப்பவருக்கும், பாரம் சுமப்பவருக்கும், நோயுற்றுப் படுத்திருப்பாருக்கும். உறவினர்களுக்கும், தேவர்களுக் கும், மாறுபட்டவர்களுக்கும் உணவு வழங்குவதை அங்கே குறிக்கிறார் (11). "கடப்பார்க்குஊண், நல்ல பொறைதாங்கி னார்க்குஊண், கிடப்பார்க்குஊண், கேளிர்க்குஊண்கேடுஇன்று உடல்சார்ந்த வானகத்தார்க்கு ஊனே, மறுதலையார்க்கு ஊண்மைத்தான் தான்.அகத்தே வாழ்வான் தக' - -

இப்படி எண்பது பாடல்களில் பல வகை நீதிகளைச் சொல்லும் இந்த நூல் மாந்தருக்கு நோய் நீக்கும் மருந்து போல உதவுவது. ". . .