பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. கைந்நிலை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அதிகமாகச் சிதையுற்றுக் கிடைத்த நூல் கைந்நிலை. இதை ஏட்டுச் சுவடியிலிருந்து அறிந்து ஆராய்ந்து முதல் முதலில் பதிப்பித்தவர் அமரர் இ. வை. ஆனந்தராமையர். கைந்நிலை கிடைக்காததற்கு முன்பு, இன்னிலை என்ற பெயருடன் ஒரு நூலை வெளியிட்டார். அது பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்தது என்றும் எழுதினார். ஆனால் அது பல பாடல்களின் தொகுப்பே என்பதும், பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையே என்பதும்

பிண்பு ஆராய்ச்சியினாலே தெளிவாயின.

கைந்நிலை என்பதற்கு ஒழுக்கம்நிற்றலைச் சொல்வது. என்று பொருள் கொள்ள வேண்டும். இங்கே ஒழுக்கம் என்பது ஐந்திணைக்கும் உரிய ஒழுக்கம். -

இந்த நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளி நாட்டுக் காவிதியார் மகனார் புல்லங்காடனார். மாறோக்கம் என்பது பாண்டி நாட்டுக் கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதி. அதில் ஒரு பிரிவு முள்ளி நாடு. அங்கே வாழ்ந்த ஒருவர் காவிதி என்னும் பட்டத்தை அரசனால் பெற்றுச் சிறப்புற்றார். அவர் இயற்பெயரைக் கூறாமல் காவிதியார் என்றே அவரை வழங்கினர். அவருடைய