பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தமிழ் நூல் அறிமுகம்

புதல்வர் இந்நூலாசிரியராகிய புல்லங்காடனார்.

இந்த நூல் குறிஞ்சி,பாலை, முல்லை, மருதம்,நெய்தல் என்ற வரிசையில் ஐந்திணைகளை அமைத்து, ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு வெண்பாக்களாக அறுபது பாட்டுக்கள் உள்ளதாக இயற்றப் பெற்றது. இதில் உள்ள பாடல்களில் 42 பாடல்களே முழுவடிவத்துடன் கிடைக் கின்றன. மற்றவை பலவகையில் சிதைந்துள்ளன.

இதற்கு ஒரு பழைய உரை உண்டு; ஆனால் முற்றும் கிடைக்கவிலலை. -

காதலன் குறித்த காலத்தில் வரவில்லை. பிரிவு தாங்காமல் காதலி வருந்துகிறாள். அவள் நெஞ்சு நடுங்கு. கிறது. தன்னுடைய தோழியைப் பார்த்துப் பேசுகிறாள்.

காதலன் மலைக்குத் தலைவன். அவனுடைய மலைச் சாரலில் தினையைப் பயிர் செய்வதுண்டு. காட்டு மரங் களை எரித்து விட்டு அந்த இடத்தை உழுது தினையை விளைப்பார்கள். அந்தப் புனம் வெந்த புனம். அங்கே. மலையிலிருந்து விழும் அருவி நீரைப் பாய்ச்சுவார்கள். அருவி நீரில் மலையின் மேலிருந்து சந்தன மரங்கள் உருண்டு வரும். அருவி நீரோடு சந்தன மரத்தின் துண்டு கள் வெந்த புணத்திலே பாயும். அப்போது சந்தனத்தின் வாசனை கம்மென்று மணக்கும். பல மரங்கள் வெந்து, கரியும் சாம்பலுமாக இருந்த புனத்தில் இப்போது அருவி நீரில் வந்த சந்தனக் கட்டையால் நறுமணம் வீசுகிறது. இது காதலனாகிய தலைவனுடைய மலையில் நிகழும் நிகழ்ச்சி. ... . . . - r

தலைவன் என்ன செய்கிறான்? நான் நிச்சயமாக வருவேன்' என்று சொல்லி விட்டுப் போனவன் வரவில்லை. இது வஞ்சகம் அல்லவா? இனி அவன் வரமாட்டானே! х - · : ·