பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. கைந்நிலை 271.

இதை நினைத்தால் தலைவியின் நெஞ்சம்நடுங்குகிறது. இதை அவள் தோழிக்குச் சொல்கிறாள்.

  • வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்

சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்துஇடுஉம் வஞ்ச மலைகாடன் வாரான்கொல்? தோழி.என் நெஞ்சம் கடுங்கி வரும்.' - தலைவனுடைய மலையைப் பற்றிச் சொல்லும்போது அங்குள்ள அருவியின் செயலைச் சொல்கிறாள், இவ்வாறு வரும் வருணனைகள் தலைவனுடைய மலையின் வளப்பத்தைச் சொல்வதற்காக மட்டும் அமைந்தவை அல்ல. அவை சில குறிப்பை உணர்த்தும். அத்தகைய குறிப்புக்களால் அந்த அண்டகளாகிய வருணனைகளை இறைச்சி என்றும் உள்ளுறை உவமம் என்றும் இலக் கணம் சொல்கிறது.வருணனைகளை உவமையாக வைத்து உவமேயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், தலைவன் முதலியோர் செய்கைகளைக் குறிப்பனவாகக் கொண்டு, வருணனையில் வரும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உவமேயத்தைப் பொருத்திக் காட்டும்படி அமைந்தால் அது உள்ளுறை உவமம் என்று சொல்லப் படும். எருமை தாமரை மலர் உள்ள குளத்தைக் குழப்பி விட்டு வைக்கோல் போரை மேய்ந்து கொம்பில் வைக் கோல் தொங்க வரும் ஊரையுடையவண்ே’ என்று. பரத்தையிடம் போய் விட்டு வந்த ஒரு தலைவனைப் பார்த்துத் தோழி சொல்வதாகப் பாட்டு வரும். அங்கே: எருமை தலைவனுக்கும். தாமரை தலைவிக்கும்; குளம் அவள் வாழும் வீட்டுக்கும், வைக்கோற் போர் பரத்தைக்கும் உவமைகள், தலைவியும் அவர் வீட்டிலுள்ளாரும் கலக்கம்.அடையும்படி செய்து விட்டுப் பரத்தையர் வீடு சென்று இன்புற்ற பிறகு, அந்த அடையாளங்களுடன் வருகிறவனே! என்று குறிப்பாகப்

புலப்படுத்துகிறாள் தோழி.