பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*272 தமிழ் நூல் அறிமுகம்

இதுதான் உள்ளுறை உவமம். பாட்டில் உள்ள வருணனைப் பகுதி ஒவ்வொன்றுக்கும் சரியாக உவமேயத் தில் ஒவ்வொரு பகுதி குறிப்பாகப் புலப்படும்.

இறைச்சியும் இப்படி வந்தாலும் நிகழும் நிகழ்ச்சி

யையே புலப்படுத்தாது அதற்கு மேல் இன்னது செய்ய

வேண்டும் என்ற கருத்தையும் சேர்த்துத் தெளிவிக்கும். உவமேயத்தில் இராத ஒரு கருத்தைப் புலப்படுத்தும்.

'இறைச்சி தானே பொருட்புறத் ததுவே"

'என்று தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. அங்கே, பொருள் என்றது உவமேயத்தை. -

இப்போது நம் பார்த்த பாட்டில் இறைச்சி அமைந் திருக்கிறது.

தலைவியினுடைய மனம் வெந்த புனம் போல இருக் கிறது; குளிர்ச்சி இல்லை. தலைவன் அருவி போல வந்து அவளுக்கு இன்பமாகிற நறுமணத்தை ஊட்ட வேண்டி யவன் ஆனால் அப்படிச் செய்யவில்லை. 'தன் மலை அருவி வெந்த புனத்துக்கு வாசம் ஊட்டும் சந்தனத்தைத் தருவது போல வருந்திய என் மனத்துக்கு உவகை ஊட்டும் செயலைச் செய்ய வேண்டாமோ!' என்ற விருப்பத்தை இந்த அடைகள் காட்டுகின்றன தலைவன் இன்னது செய்கிறான் என்பதை இது குறிக்கவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. அவன் செய்வதற்கு உவமையாக இருந்தால் உள்ளுறை உவமம். அவன் அருவியைப் போல இருந்தாலும் அவன் இனி இது செய்ய வேண்டும் என்பதை மேலே ஆய்ந்து கொள்ளும்படி அமைந்திருப்பதால் இது இறைச்சி ஆகும். இப்படி அகத்துறைப் பாடல்களில் வரும் இடங்கள் பல.